பேணிய பிறர்முயக் காரமு தவற்கெனப் பாணன் விறலிக்குப் பாங்கி மொழிந்தன்று. (இ - ள்.) விரும்பிய பரத்தையருடைய புல்லுதலைப் பெறுதல் அரிய அமிழ்தத்தோடொக்கும் தலைவற்கெனக் சொல்லிப் பாணனுடைய பாணிச்சிக்குத் தோழி சொல்லியது எ-று. (வ - று.) 1அரும்பிற்கு முண்டோ வலரது நாற்றம் பெருந்தோள் விறலி பிணங்கல் - சுரும்போ டதிரும் புனலூரற் காரமிர்த மன்றோ முதிரு முலையார் முயக்கு . (இ - ள்.) அரும்பிற்கும் உண்டோ பூவினது வாசம் ? பெரிய தோளினையுடைய பாணிச்சி , பிணங்காதேகொள்; வண்டுடனே ஆர்க்கும் புனலையுடைய ஊரற்கு நிறைந்த அமிர்தமல்லவோ முதிருமுலையினை யுடையார் தழுவுதல் எ-று. (13)
1. தொல். அகத். சூ. 54, இளம். சூ. 51, ந. மேற். |