(வ - று.) காடுங் கடுந்திரை நீர்ச்சுழியுங் கண்ணஞ்சான் சாடுங் கலனும் பலவியக்கி - நீடும் பலிசையாற் பண்டம் பகர்வான் பரியான் கலிகையா னீக்கல் கடன் . (இ - ள்.) காட்டையும் கடிய திரையினையுடைய நீர்ச்சுழியையும் கண்ணஞ்சாணய்ச் சகடம் பலவம் இடந்தோறும் செலுத்தி நீடும் இலாபம் காரணமாகப் பலபண்டமும் விற்கும் வாணிகன் பொருளிற் பற்றிலனாய்ப் பிறர்மிடியைத் தன் கையாலே நீக்குமது, செய்தி எ-று. (2) |