(வ - று.) மண்பத நோக்கி மலிவயலும் புன்செய்யும் கண்பட வேர்பூட்டிக் காலத்தால் - எண்பதனும் தத்துநீ ரார்க்குங் கடல்வேலித் தாயர்போல் வித்தித் தருவான் விளைவு . (இ - ள்.) நிலத்தின் செவ்வியைப் பார்த்து மிக்க வயலிடத்தும் கொல்லையிடத்தும் பரக்க ஏரைப்பூட்டி உழுது நற்காலத்தால் நெல்லு வரகு முதலாயின எட்டுணவினையும் தவழுந் திரையொலிக்கும் கடலை வேலியாகவுடைய பூமியிடத்துத் தாயரைப்போல வித்திவிளைப்பான் , பல்லுயிர்க்கும் ஆக்கம் எ-று. என்பதனாவன :- நெல் வரகு சாமை தினை இறுங்கு கேழ்வரகு கொள் உழுந்து என்பன; "நெல்வரகு சாமை தினையிறுங்கு கேழ்வரகு , கொள்ளுழுந்தோ டெண்விளைவாகும்." (4) |