351. பூழ் வென்றி

(வ - று.)
சொல்லுஞ் சுவட்டவர் சொல்லுக சொல்லுங்காற்
சொல்லும் பலவுள சொன்னபின் - வெல்லும்
நலம்வர நாடி நடுங்காது நூற்கட்
புலவரா லாய்ந்தமைத்த பூழ்.

(இ - ள்.) நூற்பழக்கமின்றியே சொல்லும் குறும்பூழாடிகள் வேண்டிற்றுச் சொல்லுக , சொல்லுமிடத்துச் சொல்லக்கடவ பல மந்திரமுள, அவற்றைச் சொன்னபின் வென்றிபெறும்; நன்மையுண்டாக ஆராய்ந்து கலங்காது நூலிடத்து அறிவுடையாரால் இலக்கணம் ஆராய்ந்து மதித்த பூழ் எ-று.

சொல்லக்கடவ மந்திரம் பலவாவன : தீற்றும் அரிசி ஓதுமந்திரமும் பச்சிலை பிசைந்து தடவும்போது சொல்லுமந்திரமும் , செவியுள்ளுறுத்து மந்திரமும்.

(9)