352. 1சிவல்வென்றி

(வ - று.)
ஒட்டியா ரெல்லா முணரார் புடைத்தபின்
விட்டோட வேண்டுமோ தண்ணுமை - விட்ட
சுவடேற்கு மாயிற் சுடரிழாய் சோர்ந்து
கவடேற்க வோடுங் களத்து .

(இ - ள்.) சபதங் கூறும் சிவலினையுடையாரெல்லாம் அறியார்; எதிர்ச்சிவலைத் தாக்கிய பின்பு தண்ணுமையைக் கைவிட்டோட வேண்டுமோ , இந்தச்சிவல் வந்தபொழுதே இதனுக்கு அஞ்சி ஓடவமையும்; இவர் பொரவிட்டவற்றுள் ஏன்றொன்று எதிர்க்குமாயின் , விட்டுவிளங்கும் ஆபரணத்தினையுடையாய் , வருந்தி இதன் கவட்டினுட் புகுந்து கண்டோர் நகைக்க ஓடுங் களத்திடத்து எ-று.

ஆதலால் விட்டோட வேண்டுமோ தண்ணுமை.

(10)

1. பட்டினப் . 77, ந.