353. கிளிவென்றி

(வ - று.)
இலநா முரைப்பதன்க ணெல்வனை நாணப்
பலநாள் பணிபதமுங் கூறிச் - சிலநாளுள்
பொங்கரி யுண்கணாள் பூவைக்கு மாறாகப்
பைங்கிளியைக் கற்பித்தாள் பாட்டு .

(இ - ள்.) நாம் அதனிடத்து இகழ்ந்து சொல்லுஞ் சொல் இல; விளங்கும் வளையினையுடையாய் , நீ நாணப் பலநாளும் தாழ்ந்த சொற்களையுங்கூறிச் சில நாளுள்ளே மிக்க செவ்வரியினையுடைய மையுண்ட கண்ணாள் நம் பூவைக்கு மாறுபடத் தன் பசுங்கிளியைப் பாட்டைக் கற்பித்தாள் எ-று.

நாமுரைப்பு இல .

(11)