355. குதிரை வெற்றி

(வ - று.)
1ஐந்து கதியும் பதினெட்டுச் சாரியையும்
கந்து மறமுங் கறங்குளைமா- முந்துற
மேல்கொண் டவைசெலீஇ வென்வேலான் மேம்பட்டான்
வேல்கொண்ட கண்ணாளை மீட்டு.

(இ - ள்.) விக்கிதம் வற்கிதம் உபகண்டம் ஜவம் மாஜவம் என்னும் இப்பஞ்சதாரையும் பதினெட்டு வகைப்பட்ட சுற்று வரவினையும் கழியப் பாய்தலையும் கறுவுதலையும் ஒலிக்குந் தலையாட்டத்தினையுமுடைய குதிரையை முந்துற மேல்கொண்டு முன்பு சொன்னவற்றைச் செலுத்தி வெற்றிவேலைக்கொண்டு மேம்பட்டான், பிறரை வென்று வெற்றிமகளைத் தன்னிடத்து மீட்டுக்கொண்டு எ-று.

(13)

1. மதுரைக். 389, ந; சீவக. 784.