(வ - று.) 1கைகால் புருவங்கண் பாணி நடைதூக்குக் கொய்பூங்கொம் பன்னாள் குறிக்கொண்டு - பெய்பூப் படுகளிவண் டார்ப்பப் பயில்வளைநின் றாடும் தொடுகழன் மன்னன் றுடி. (இ - ள்.) கையாலும், காலாலும், புருவத்தாலும், கண்ணாலும், தாளத்தையும் செலவையும் இசையையும் கொய்யப்பட்ட பூங்கொம்பன்னாள் கருதிக்கொண்டு சூடியபூவில் மிக்க களிப்பினையுடைய வண்டு ஆரவாரிப்பச் செறிந்த வளையினையுடையாள் நின்று ஆடும், கட்டுங்கழல் வேந்தனுக்குத் துடிக்கூத்தை எ-று. (17)
1. தொல். புறத். சூ.16, இளம்.; சூ. 20, ந. மேற். |