வள்வார் முரசமொடு வயக்களிறு முழங்க ஒள்வாட் டானை யுருத்தெழுந் தன்று. (இ - ள்.) வலியினையுடைய வாராலேவிசித்த வீரமுரசுடனே வலிய யானை முழங்க அழகிய வாளினையுடைய சேனை கோபித்துக் கிளர்ந்தது எ-று. (வ - று.) பௌவம் பணைமுழங்கப் பற்றார்மண் பாழாக வௌவிய வஞ்சி வலம்புனையச் - செவ்வேல் ஒளிரும் படைநடுவ ணூழித்தீ யன்ன 1களிறுங் களித்ததிருங் கார். (இ - ள்.) கடல்போல வீரமுரசம் ஆர்ப்பப் பகைவர்நிலம் அழியக் கைப்பற்றின வஞ்சியை வெற்றியாகச் சூடச் சிவந்தவேல் விட்டுவிளங்கும் சேனை நடுவே யுகாந்தகாலத்து நெருப்பையொத்த யானையும் மகிழ்ந்து முழங்காநின்றது, மேகத்தைப்போல எ - று. உம்மை : சிறப்பும்மை. (2)
1. பரி. 8 : 17-8; அகநா. 114 : 12-3; புறநா.81; 1-2; குறிஞ்சி.162-5; நன்.சூ.4458, மயிலை.மேற். |