வேண்டிய பொருளின் விளைவுநன் கறிதற் கீண்டிருண் மாலைச் சொல்லோர்த் தன்று . (இ - ள்.) விரும்பியபொருளின் ஆக்கத்து அழகுணர்தற்குச் செறியும் இருண்ட மாலையிடத்து நற்சொற் கேட்டது எ-று. (வ - று.) எழுவணி சீறூ ரிருண்மாலை முன்றிற் குழுவினங் கைகூப்பி நிற்பத் - தொழுவிற் குடக்கணீ கொண்டுவா வென்றாள் குனிவிற் றடக்கையாய் வென்றி தரும் . (இ - ள்.) கணையஞ்சூழ்ந்த சீறூரில் இருளையுடைய மாலைக்காலத்து முற்றத்திலே திரண்ட நம் கூட்டம் கைகுவித்துநிற்பக் கட்சாடியிருக்கும் 1ஏணியிற் குடத்துக்கள்ளை நீ எடுத்துக்கொண்டு வாவென்றாள்; ஆதலால், வளைந்த வில்லைப் பெரிய கையிலே உடையவனே, நமக்கு வெற்றியைத் தரும் எ-று. குடக்கணாகொண்டுவாவென்றாள் என்று பாடமோதி மேல்பாற்றொழுவத்திற் பசுவை அடித்துக் கொண்டுவாவென்றாளென்று பொருளுரைப்பாருமுளர் . (4)
1. மேனி . |