மன்னவன் புகழ்கிளந் தொன்னார்நா டழிபிரங்கின்று. (இ - ள்.) அரசன் கீர்த்தியைச் சொல்லிப் பகைவர்தேசம் கெடுவதற்கு வருந்தியது எ-று. (வ - று.) 2தாழார மார்பினான் றாமரைக்கண் சேந்தனவாற் பாழாய்ப் பரிய விளிவதுகொல்-யாழாய்ப் புடைத்தே னிமிர்கண்ணிப் 3பூங்கட் புதல்வர் நடைத்தே ரொலிகறங்கு நாடு. (இ - ள்.) ஆரந்தாழ்ந்த மார்பினையுடையவன் தாமரை மலர் போன்ற கண்கள் சிவந்தன,பாழாய்க் கண்டாரிரங்கக் கெடும்போலும்; யாழையொப்ப முரன்று பக்கத்திலே வண்டுகள் ஆர்க்குமாலையினையும் பொலிவினையுடைய கண்ணினையுமுடைய மைந்தர் சிறுதேரோசை ஆரவாரிக்கும் நாடு எ - று. நாடு பாழாய்ப் பரிய விளிவதுகொலென்க. (8)
1. சிலப்.25 : 145. 2. முருகு.104; புறநா.152:10; கம்ப. சூளா.30. 3. பட்.24-5; குறுந்.61;சீவக.89. |