நீடவுங் குறுகவு நிவப்பவுந் தூக்கிப் பாடிய புலவர்க்குப் பரிசினீட் டின்று. (இ - ள்.) உச்சமாகவும் மந்தமாகவும் அதன்மேற் சமமாகவும் இசையையளந்து பாடின அறிஞர்க்குப் பரிசிலைக்கொடுத்தது எ-று. செந்தூக்கு முதலான எழுவகைத் தூக்கினாலும் தூக்கியென்றுமாம்.ஈண்டு நிவப்பவென்றது மந்தத்திலே ஓங்கியசமத்தை; 1"ஒரு சீர் செந்தூக் கிருசீர் மதலை, முச்சீர் துணிபு நாற்சீர் கோயில், ஐஞ்சீர் நிவப்பே யறுசீர் கழாஅல், எழுசீர் தானெடுந் தூக்கென மொழிப" என்றராகலின். (வ - று.) சுற்றிய சுற்ற முடன்மயங்கித் தம்வயி றெற்றி மடவா ரிரிந்தோட-முற்றிக் 2குரிசி லடையாரைக் கொண்டகூட் டெல்லாம் பரிசின் முகந்தன பாண். (இ - ள்.) சூழ்ந்த பெருங்கிளை ஒக்கக் கலங்கிக் தத்தம் வயிற்றிலே அடித்துக்கொண்டு மகளிர் கெட்டோடப் பகைவர் நாட்டை வளைத்துத் தலைவன் சத்துருக்களைப் பறித்துக்கொண்ட பொருண்முழுதும் தாம் பெறும் பேறாக முகந்துகொண்டன பாண்கிளை எ-று. (16)
1. சிலப்.3:16;14:150, அடியார். மேற். 2. சிறுபாண். 247-8: மதுரைக். 145-6; மலைபடு. 71-2; பதிற். 2-ஆம்பத். பதி;44; |