மடுத்தெழுந்த மறவேந்தர்க்குக் கொடுத்தளித்துக் குடியோம்பின்று. (இ - ள்.) மண்டி எதிர்ந்த வீரத்தையுடைய மன்னர்க்குத் திறையைக் கொடுத்து நாடுடைய அரசன் குடிக்குத் தண்ணளிபண்ணிக் காத்தது எ-று. (வ - று.) தாட்டாழ் தடக்கைத் தனிமதி வெண்குடையான் வாட்டானை வெள்ளம் வரவஞ்சி-மீட்டான் மலையா மறமன்னன் மால்வரையே போலும் கொலையானை பாய்மாக் கொடுத்து. (இ - ள்.) தாளிலே தாழநீண்ட பெரியகையினையும் ஒப்பில்லாத மதியினையொத்த கொற்றக்குடையினையுமுடையான் வாளினையுடைய சேனைவெள்ளம் தங்கள் நாட்டில் வருதற்கு அஞ்சி விலக்கினான்;எதிர்க்கமாட்டாத மாற்சரியத்தினையுடைய வேந்தன் பெரியமலையினை யொக்கும் கொலையானையினையும் சதிபாயும் குதிரையினையும் கொடுத்து எ-று.
கொடுத்து மீட்டானென்க. (17) |