முன்னடையார் வளநாட்டைப் பின்னருடன் றெரிகொளீஇயன்று . (இ - ள்.) தன்னுடைய முன்னே வந்து செறியாதார் நல்ல தேசத்தைப் பின்பும் கோபித்து நெருப்பைக் கொளுத்தியது எ-று. (வ - று.) பீடுலா மன்னர் நடுங்கப் பெரும்புகை ஊடுலாய் வானத் தொளிமறைப்ப - நாடெலாம் பின்னும் பிறங்கழல் வேய்ந்தன பெய்கழற்கால் மன்னன் கனல மறம் . (இ - ள்.) பெருமைபரந்த மன்னர் துளங்கப் பெரியதூமம் நடுவே உலாவி ஆகாயத்தின்கண் விளக்கித்தினை மறைப்பத் தேயமுழுதும் இரண்டாவதும் மிக்க நெருப்பு மூடப்பட்டன , காலிலேயிட்ட வீரக்கழலையுடைய அரசனுடைய சினம் மூள்கையாலே எ-று. (22)
1. சிலப். 25 : 143 . |