64. படைவழக்கு
12முத்தவிர்பூண் மறவேந்தன்
ஒத்தவர்க்குப் படைவழங்கின்று .

(இ - ள்.) முத்து விளங்கும் ஆபரணத்தையுடைய சினமன்னன் தம்மில் இனமொத்தவருக்கு ஆயுதத்தைக் கொடுத்தது எ-று.

(வ - று.)
1ஐயங் களைந்திட் டடல்வெங்கூற் றாலிப்ப
3ஐயிலை யெஃக மவைபலவும் - மொய்யிடை
4ஆட்கடி வெல்களிற் றண்ணல் கொடுத்தளித்தான்
வாட்குடி வன்க ணவர்க்கு .

(இ - ள்.) ஐயப்பாட்டை ஒழித்துக் கொலைத்தொழிலையுடைய வெய்யகாலன் உணவுபெற்றேனென்று ஆர்த்துக்கொள்ள வியக்கத்தக்க இலைத்தொழிலான்மிக்க வேல் பலவற்றையும் பூசலிடத்து ஆளைக் கடியும் போர் வெல்லும் யானையினையுடைய தலைவன் வழங்கித் தலையளி செய்தான் மறக்குடியில் தறுகணவர்க்கு எ-று.

(4)

1. தக்க. 622, உரை, மேற்.
2. மொய்த்தவிர் , மொய்த்தபூண்.
3. ஐயிலைவேலெஃகம்.
4. சீவக. 321.