காரெதிரிய 2கடற்றானை போரெதிரிய பூக்கொண்டன்று . (இ - ள்.) மேகம் பொருந்திய கடல்போல ஒலிக்குஞ்சேனை பூசலை ஏற்றுக்கொள்வான்வேண்டி அரசன் கொடுத்த பூவினைக்கொண்டது எ-று. (வ - று.) பருதிசெல் வானம் பரந்துருகி யன்ன குருதியா றாவதுகொல் குன்றூர் - கருதி மறத்திறத்தின் மாறா மறவருங் கொண்டார் புறத்திறுத்த வேந்திரியப் பூ . (இ - ள்.) ஆதித்தன் படும் அந்திவானம் உருகிப்பரந்தாலொத்த உதிரநதி ஆவதுபோலும் , மலைசூழ்ந்த ஊர்; நினைந்து சினக் கூற்றில் தப்பாத கொடுவினையாளரும் கைக்கொண்டார் , தங்களூர்ப்புறத்தே விட்ட வஞ்சி மன்னன்கெடப் பூவினை எ-று. உம்மை : சிறப்பும்மை . (10)
1. புறநா. 289 : 9, 341 : 9 . 2. கடற்றானையான் |