71. தலைக்காஞ்சி
மைந்துயர மறங்கடந்தான்
பைந்தலைச் 1சிறப்புரைத்தன்று .

(இ - ள்.) வலியோங்க மாற்றார்தம் மறத்தொழிலைக் கடந்தவன் பசுந்தலைமதிப்பைச் சொல்லியது எ-று.

(வ - று.)
2விட்டிடனென் வேந்தன் 3விலையிடினெ னிவ்வுலகின்
இட்டுரையி னெய்துவ வெய்திற்றால் - ஒட்டாதார்
போர்தாங்கி மின்னும் புலவா ளுறைகழியாத்
தார்தாங்கி வீழ்ந்தான் றலை .

(இ - ள்.) போக்கிடின் என் ? அரசன் தலைக்குத்தக்க விலைகொடுக்கின் என் ? இந்தப்பூமியிற் சிறப்பித்துச் சொல்லும் இசையினாற் பெறுவவெல்லாம் பெற்றதால்; பகைவர் பூசலைத்தடுத்து ஒளியைவிடும் புலால் நாற்றத்தையுடைய வாளை உறையைவிட்டெடுத்து விட்ட வஞ்சியான் தூசிப்படையைத் தடுத்துப் பட்டவனுடைய தலையினை எ-று.

(11)

1. பு - வெ. 88.
2. விட்டிடிலென்.
3. விலையிடிலென்.