90. குதிரைமறம்
ஏமாண்ட நெடும்புரிசை
வாமானது 1வகையுரைத்தன்று.

(இ - ள்.) எய்யுந் தொழில் மாட்சிமைப்பட்ட பெரிய மதிலிடத்துப்பாயும் குதிரையது பகுதியைச் சொல்லியது எ-று.

(வ - று.)
2தாங்கன்மின் றாங்கன்மின் றானை விறன்மறவிர்
ஓங்கன் மதிலு ளொருதனிமா-ஞாங்கர்
3மயிரணியப் பொங்கி மழைபோன்று மாற்றார்
உயிருணிய வோடி வரும்.

(இ - ள்.) தடுத்தற்கரிது! தடுத்தற்கரிது!! தடாதேகொண்மின்! தடாதேகொண்மின்!! சேனையிடத்து வென்றிவீரர்காள் ,மலைபோன்ற புரிசையிடத்து ஒப்பில்லாததொரு குதிரை பக்கத்தே கவரியிட எழுந்து மேகத்தையொத்துப் பகைவருயிரை உண்பான்வேண்டிக் கடுகிவரும் எ-று.

(5)

1. நிலையுரைத்தன்று
2. புறநா. 299, 303 - 4.
3. மதுரைக். 391.