| புகல் - புகுமிடம் | 51 |
| புகல் - வெற்றி | 97 |
| புகல - விரும்ப | 8, 22, 38, 78, 84 |
| புகழ் | 14, 51 |
| புகழ்ந்தோர்க்குக் கொடுப்பதினும் உழைத்தோருக்குக் கொடுப்பது இன்றியமையாதது | 36 |
| புகழ்நிற்கும் உயிர்நில்லா | 51 |
| புகழ்பூமியில் நிலைக்குமென்பது | 122 |
| புகழ்மாலைசூடுதல் | 83 |
| புகழகம் புழகமெனநிற்றல் | 161 |
| புகன்ற - விரும்பிய | 138 |
| புகன்று - விரும்பி | 16 |
| புகா - உணவு | 116 |
| புகை - தூமமணி | 114 |
| புகையழல் - மூளும் தழல் | 120 |
| புடை - பக்கம் | 114 |
| புடைப்ப - அலைப்ப | 39 |
| புடைவை - ஆடவர் உடுக்கும் ஆடை | 79, 147 |
| புண்ணியதீர்த்தம் | 58 |
| புண்மொழிதல் - நிமித்தஞ்சொல்லுதல் | 10 |
| புண்வெய்துயிர்த்தல் | 32 |
| புணர்ப்பு - துணை | 120 |
| புணராமல் -கூடாமையாலே | 133 |
| புணை - தெப்பம் | 39, 136, 141, 149 |
| புதவு - கதவு | 53 |
| புயல் - மழை | 95 |
| புரவலன் - அரசன் | 89 |
| புரவலன் - உபகாரி | 99 |
| புரி - முறுக்கு | 109 |
| புரிசை - மதில் | 45 |
| புரிந்துகொண்ட - விரும்பித் தெளிந்த | 124 |
| புரிந்தோர் - விரும்பியவர் | 119 |
| புரிவளை - முறுக்குவளை | 123, 136 |
| புரிவு - தப்புதல் | 82 |
| புரிவு - பிரியம் | 159 |
| புரைப்பு - ஒப்பு | 15 |
| புரையோர் - உயர்ந்தோர் | 57 |
| புல்லற்கூறியது - ஏசியது | 143 |
| புல்லார் - பகைவர் | 11 |
| புல்லென்ற நா | 122 |
| புலங்கடந்தோர் - இந்திரிய சயம் பண்ணினோர் | 124 |
| புலத்தல் - முனிதல் | 144 |
| புலந்துரைத்தல் - ஊடிச்சொல்லல் | 108 |
| புலம்பு - தனிமை | 117, 136, 140, 142, 155 |
| புலர்தல் - அகலப்போதல் | 40 |
| புலர்விடிதல் - பொழுது புலரும் விடியற்காலம் | 108 |
| புலரியம்போது - விடியற்காலம் | 144 |
| புலவர் - அறிஞர் | 2 |
| புலவேல் - புலால் நாறும்வேல் | 111 |
| புலாழி - புலால் நாற்றத்தினையுடைய சக்கரம் ('புல' என்பதனுள் அகரம் தொக்கது) | 40 |
| புலி | 7, 14, 29 |
| புலி வீரர்க்கு உவமை | 7 |
| புழகம் (=புகழகம்) - புகழினையுடைய மனையிடம் | 160, 161 |
| புழை - சிறுவாயில் | 42 |
| புழை - துவாரம் | 32 |
| புள் - நிமித்தம் | 9, 11 |
| புள் - பறவை | 7 |
| புற்கென்ற - புல்லென்ற | 122 |
| புற்கென்ற மாலை | 135 |
| புற்கென்று | 94 |
| புற்செல்வம் - புல்லியசம்பத்து | 127 |
| புறங்காப்ப | 104 |
| புறங்கூற்று | 139 |
| புறத்திருத்தல் | 53 |
| புறத்திறை - பக்கத்தே தங்குதல் | 6 |
| புறப்புறம் | 130 |
| புறப்பொருள் | 1 |
| புறம் - முதுகு | 21, 125 |
| புறவீடு - புறத்தேவிடுதல் | 21, 34 |
| புறவு - காடு | 90 |
| புறவு - குறுங்காடு | 150 |
| புன்கண் - துன்பம் | 40 |
| புன்செய் - கொல்லை | 157 |
| புன்மாலை - புற்கென்ற மாலை | 135 |
| புனலாடையாள் - கடலாகிய புடைவையையுடைய நிலமகள் | 86 |
| புனையிழை - அணிந்த ஆபரணதினையுடையாள் | 118 |