| முக்காலவுணர்ச்சி | 79 |
| முகத்தினும் மார்பினும் இரத்த மொழுகநின்ற வீரனுக்குச் சாதிலிங்கம் சாதிலிங்கம் சொரியும் மலை | 15 |
| முகந்த - ஏற்றுக்கொண்ட | 24, 126 |
| முகில் - மேகம் | 56 |
| முகிழ்நகை - மூரன்முறுவல் | 133 |
| முகை - மொட்டு | 70, 80 |
| முடக்கறை | 57 |
| முடக்கு | 42, 55, 57 |
| முடித்தலை | 76 |
| முடுகழல் - விரைந்து செல்லும் நெருப்பு | 22 |
| முத்திமார்க்க விசாரமே உறுதியுடைத்தென்பது | 125 |
| முத்தீ | 78, 81 |
| முதல்வர் | 11 |
| முதியம் - பழையோம் | 24 |
| முந்துற - முன்னே | 139 |
| முந்துறுதல் - முன்செல்லல் | 11 |
| முந்தை - (பாட்டனுமைய) பாட்டன் | 11 |
| முந்தைவழி - முன்னோர் செய்த நெறி | 120 |
| முந்நீர் - கடல் | 86 |
| முயக்கு | 108 |
| முயல் | 151 |
| முயற்கூடு - முயலுக்கு உறைவிட மானமதி | 151, 152 |
| முரசொலிக்கு இடிஒலி | 58 |
| முரண் - மாறுபாடு | 55, 65, 112 |
| முரன்று - ஒலித்து | 23 |
| முருகபூசை பண்ணுவோன் | 12 |
| முருகவேள் கிரௌஞ்சமலையைப் பிளந்தது | 50 |
| முருகவேள் சரவணப்பொய்கையில் தாமரையிற்றோன்றி இந்திரனை வென்றது | 97 |
| முருகவேள் மாத்தடிந்தது | 50 |
| முருகவேளுக்கு மகளிர் வெறியாட்டாளனொடு வள்ளிக்கூத் தாடல் | 106 |
| முருகு - நறுநாற்றம் | 12 |
| முருங்க - கெட | 6, 112 |
| முருங்க - முறிய | 11 |
| முல்லை - இயல்புமிகுதி | 81, 91, 126 |
| முல்லைக்குத் தேர்கொடுத்தது | 91 |
| முல்லைத்தார் - வெற்றிமாலை | 102 |
| முல்லைத்தார் வேந்தன் | 22 |
| முழவு | 75 |
| முழவலி - நிறைந்த வன்மை | 67 |
| முழவலி - மிக்குரம் | 85 |
| முள் | 119, 134 |
| முள்ளம்பன்றி | 83 |
| முள்ளேயிறு - கூரியபல் | 141 |
| முள்ளேயிறு - முட்போன்றபல் | 133 |
| முற்படர்ந்த - மேம்பட்ட | 101 |
| முற்றி - வளைத்து. | 26 |
| முற்று - சூழ்தல் | 57 |
| முற்று - வளைவு (முற்றுகை) | 57 |
| முறி - தளிர் | 65 |
| முறுவல் - நகை | 118 |
| முறை - வகை | 29 |
| முன்பு - வலி | 5 |
| முன்றில் - முற்றம் | 5 |
| முன்னுதல் - கருதுதல் | 6 |
| முன்னோர் - தமையன்மார் | 102 |
| முன்னோன் - அப்பன் | 25 |
| முனிவர் | 124 |
| முனிவர் மான்றோலுடுத்தல் | 79 |
| முனிவரன் | 1 |
| முனிவு - வெறுப்பு | 136 |
| முனை - சண்டை | 23, 34 |
| முனை - தேசம் | 99 |
| முனை - பகை | 34 |
| முனை - பகைப்புலம் | 5 |
| முனை - படை | 34 |
| முனை - புலம் | 34 |
| முனை - பூசல் | 34 |
| முனை - போர் | 3, 92 |
| முனை - முகம் | 10 |
| முனை - வேற்றுப்புலம் | 3, 10 |
| முனையமர் - முற்பட்ட பூசல் | 121 |