வ - று.புல்லார் நிரைகருதி யாஞ்செல்லப் புண்ணலம் பல்லா ரறியப் பகர்ந்தார்க்குச் - சொல்லாற் கடஞ்சுட்ட வேண்டா கடுஞ்சுரையா னான்கு குடஞ்சுட் டினத்தாற் கொடு. (இ - ள்.) பகைவரது ஆனிரையைக் கொள்ள நினைந்து யாம்போக நிமித்தநன்மையைப் பலருமுணரச் சொன்னார்க்கு மொழியாற் பெறு ? முறைமை இதுவென்று கருதவேண்டா; ஒன்றொரு குடம்பால் போதும் மிக்க மடியினையுடைய பசு நான்கு இனங்கடோறுங் கொடு எ - று. கடஞ்சுட்ட வேண்டா கொடுவென்க. (18) 19. துடிநிலை தொடுகழன் மறவர் தொல்குடி மரபிற் படுக ணிமிழ்துடிப் பண்புரைத் தன்று. (இ - ள்.) கட்டும் கழல்வீரர் பழங்குடி முறைமையில், மிக்க கண்ணினையுடைத்தாய் ஒலிக்கும் துடியைக் கொட்டுமவன் குணத்தைச் சொல்லியது எ - று. வ - று.1முந்தை முதல்வர் துடிய ரிவன்முதல்வர் எந்தைக்குத் தந்தை யிவனெனக்கு - வந்த குடியொடு கோடா மரபினோற் கின்னும் வடியுறு தீந்தேறல் வாக்கு. (இ - ள்.) என் பாட்டனுடைய பாட்டன் முதலாயினார்க்குத் துடிகொட்டினார் இவன் பாட்டனுடைய பாட்டன் முதலாயினார்; என் தமப்பனுக்கு இவன் தமப்பன் துடிகொட்டினான்; இவன் எனக்குத் துடி கொட்டுவான்; வழிவந்த குடிமுறைமையோடு பிறழாத முறைமையினை யுடையவனுக்கு இன்னமும் வடித்தலுற்ற தித்தித்த மதுவினது தெளிவை வார்ப்பாயாக எ - று. (19) 20. கொற்றவைநிலை ஒளியினீங்கா விறற்படையோள் அளியினீங்கா வருளுரைத்தன்று. (இ - ள்.) விளக்கத்தினின்றும் ஒழியாத வெற்றியான்மிக்க ஆயுதத்தையுடையோளது இரக்கத்தினின்றும் ஒழியாத கருணையைச் சொல்லியது எ - று. வ - று.2ஆளி மணிக்கொடிப் பைங்கிளிப் பாய்கலைக் கூளி மலிபடைக் கொற்றவை - மீளி அரண்முருங்க வாகோள் கருதி னடையார் முரண்முருங்கத் தான்முந் துறும்.
1. ''இவற் கீத்துண்மதி'' (புறநா. 290) என்பது இதனை ஒத்துள்ளது. 2. தொல். புறத். சூ. 4, இளம். மேற். |