286. ஐயம் 1கன்னவி றோளான் கண்டபி னவளை இன்னளென் றுணரா னையமுற் றன்று. (இ - ள்.) உலக்கல் சீலிக்கப்பட்ட தோளினையுடையான் தரிசித்த பின் அவளை இன்ன தன்மையளென்று அறியான் ஐயப்பட்டது எ-று. வ - று. தாமரைமேல் வைகிய தையல்கொ றாழ்தளிரிற் காமருவும் வானோர்கள் காதலிகொல்-தேமொழி மையம ருண்கண் மடத்தைகண் ஐய மொழியா தாழுமென் னெஞ்சே. (இ - ள்.) தாமரைப்பூவின்மேலே தங்கின திருமகள்கொல்லோ ? தாழும் தளிரினையுடைய சோலைமருவும் வானிடத்தோர்தம் காதன்மிக்க தெய்வமகள்கொல்லோ? இனியமொழியினையும் அஞ்சனமேவின விழியினையுமுடைய மடவாளிடத்து ஐயப்பாடு ஒழியாது துயரத்திலே அழுந்தா நின்றது, என்னுடைய நெஞ்சு எ-று. (2) 287. துணிவு மாநிலத் தியலு மாத ராமெனத் 4தூமலர்க் கோதையைத் துணிந்துரைத் தன்று. (இ - ள்.) பெரிய பூமியிடத்து நடக்கும் காதலினையுடையார் இவரெனச் சொல்லித் தூய்தான பூமாலையினையுடையாளைத் தெளிந்து சொல்லியது எ-று. வ - று.3திருநுதல் வேரரும்புந் தேங்கோதைவாடும் இருநிலஞ் சேவடியுந் தோயும் - அரிபரந்த போகித ழுண்கணு மிமைக்கும் ஆகு மற்றிவ ளகடலித் தணங்கே. (இ - ள்.) அழகிய நுதலும் வேர்முகிழ்க்கும்; தேனையுடைய மாலையும் வாடும்; பெரியநிலத்தினைச் சிவந்த அடியும் பொருந்தும்; செவ்வரி கருவரிபரந்த நீண்ட இமையினையுடைய மையுண்ட விழியும் இமைக்கும்; இவள் அகன்ற பூமியிடத்து மானிடமகளாகிய தெய்வமாகும் எ-று. மற்று: வினைமாற்று. இவள் ஆகுமென்க. (3) 288. உட்கோள் இணரார் கோதையென் னெஞ்சத் திருந்தும் உணரா ளென்னையென வுட்கொண் டன்று. (இ - ள்.) கொத்து நிறைந்த மாலையினையுடையாள் என் மனத்திலே இருந்தும் என்னை அறியாளென உள்ளத்திலே தலைவன் கைக்கொண்டது எ-று. வ - று. கவ்வை பெருகக் கரந்தென் மனத்திருந்தும் செவ்வாய்ப் பெருந்தோட் டிருநுதலாள் - அவ்வாயில்
1. பு. வெ. 295. 2. நாற்கவி. சூ. 120, உரை, மேற். 3. ஷ. சூ.121, உரை, மேற்.; யா. கா. செய். 15, மேற்; பெருங். 4. 17: 32-3. (பி - ம்)4. 'தூய்தாங் கோதை ' |