வ - று. கன்னவி றோளானைக் காண்டலுங் கார்க்குவளை அன்னவென் கண்ணுக் கமுதமாம் - என்னை மலைமலிந் தன்ன மார்பம் முலைமலிந் தூழூழ் முயங்குங் காலே. (இ - ள்.) மலையையொத்த தோளானைக் கண்டேனாகக் கருங்குவனை யனைய என் கண்ணிற்கு அமிழ்தமாகாநின்றது; எங்ஙனே இருக்குமோ ! வரை பரந்தாலொத்தஅகலத்தை முலை விம்மி முறை முறையாகத் தழுவுமிடத்து எ-று. (2) 296. உட்கோள் வண்டமர் குஞ்சி மைந்தனை நயந்த ஒண்டொடி யரிவை யுட்கொண் டன்று. (இ - ள்.) சுரும்பு மேவும் மயிரினையுடையதலைவனை விரும்பிய ஒள்ளிய வளையினையுடைய தலைவிஉட்கொண்டது எ-று. வ - று. உள்ள முருக வொளிவளையுங் கைநில்லா கள்ளவிழ் தாரானுங் கைக்கணையான் - எள்ளிச் சிறுபுன் மாலை தலைவரின் உறுதுய ரவலத் துயலோ வரிதே. (இ - ள்.) நெஞ்சு வருந்த ஒள்ளிய தொடிகளும்கரத்தைப் பொருந்தாவாயின தேனொழுகப்பட்ட மாலையினையுடையானும் என்னுடைய கரங்களுக்கு எய்தானாயினான்; இகழ்ந்துசிறியதாய்ப் புற்கென்ற மாலைக் காலம் கைகூடின், மிகும் வருத்தத்தைச் செய்யும் இழுக்கினின்றும் பிழைத்தல்சால அருமையுடைத்து. எ-று. (3) 297. மெலிதல் ஒன்றார் கூறு முறுபழி நாணி மென்றோ ளரிவை மெலிவோடு வைகின்று. (இ - ள்.) பொருந்தாதார் சொல்லும் மிக்க அலருக்கு நாணி மெத்தென்ற தோளினையுடைய தலைவிவாட்டத்துடனே தங்கியது எ-று. வ - று. குரும்பை வரிமுலைமேற் கோல நெடுங்கண் அரும்பிய வெண்முத் துகுப்பக் - கரும்புடைத்தோட் காதல்செய் காமங் கனற்ற ஏதி லாளற் கிழந்தனெ னெழிலே. (இ - ள்.) குரும்பைபோன்ற நல்ல முலைமேலே அழகிய நெடியவிழி தோற்றிய வெண்முத்தான கண்ணீரைச்சிந்தச் சந்தனகுங்குமங்களாற் காமனது கரும்பெழுதிய தோளினைத் தழுவவேண்டுமென்னும் ஆசையைப் பண்ணும் விழைவு கனற்ற நமக்கு அருளாத அயலானுக்குப் போக்கினேனே என் அழகினை எ-று. (4) |