5. நொச்சிப்படலம் (இ - ள்.) சினச்சேனையையுடைய சினமன்னர் வீரசுவர்க்கத்திடத் துப்போன போக்கைச் சொல்லியது எ - று. (வ - று.)1பாயினார் மாயும் வகையாற் பலகாப்பும் ஏயினா ரேய விகன்மறவர் - ஆயினார் ஒன்றி யவரற வூர்ப்புலத்துத் தார்தாங்கி வென்றி யமரர் விருந்து. (இ - ள்.) அரணைச் சூழப் பரந்தார் படுமுறையாற் பலகாவலையும் ஏவினார்; ஏவின மாறுபாட்டையுடைய வீரர் ஆயினார், எதிரதாகக் கிட்டினவர் கெட ஊரிடத்துத் தூசிப்படையைத் தடுத்து வெற்றியினை யுடைய தேவர்கட்கு விருந்து எ - று. விருந்து ஆயினாரென்க . (2) 88. ஊர்ச்செரு அருமிளையொடு கிடங்கழியாமைச் செருமலைந்த சிறப்புரைத்தன்று. (இ - ள்.) பகைவராற் புகுதற்கரிய காவற்காட்டோடு அகழி சிதையாதபடி பூசல்செய்த மதிப்பினைச் சொல்லியது எ - று. (வ - று.)வளையும் வயிரு மொலிப்பவாள் வீசி இளையுங் கிடங்குஞ் சிதையத் - தளைபரிந்த நோனார் படையிரிய நொச்சி விறன்மறவர் ஆனா ரமர்விலக்கி யார்ப்பு. (இ - ள்.) சங்கும் கொம்பும் முழங்க வாளையோச்சிக் காவற்காடும் அகழுமழியக் காவற்பிணியை யறுத்த பகைவரான உழிஞையார் சேனைகெட நொச்சியிடத்து வெற்றிவீரர் ஆனார், போரைவிலக்கி ஆரவாரிப்பு எ - று. ஆரவாரிப்பு ஆனாரென்க . (3) 89. செருவடை வீழ்தல் ஆழ்ந்துபடு கிடங்கோ டருமிளை காத்து வீழ்ந்த வேலோர் விறன்மிகுத் தன்று. இ - ள். ஆழமுடைத்தான கிடங்கினோடு அரிய காவற்காட்டைக் காத்துப் பட்ட வேல்வீரர் வெற்றியைச் சொல்லியது. எ - று வ - று. ஈண்டரில் சூழ்ந்த விளையு மெரிமலர்க் காண்டகு நீள்கிடங்குங் காப்பாராய்-வேண்டார் மடங்க லனைய மறவேலோர் தத்தம் உடம்பொடு காவ லுயிர்.
1. 'தொல'்.புறத்.சூ. 11, இளம். மேற். 2. பு.வெ.130 |