(இ - ள்.) பச்சிலை விரவித் தொடுத்த வாகைப்பூவைப்புனைந்து மாறுபாட்டை மேற்கொண்டு அலையும் கடல்போன்றசேனையினையுடைய வேந்தைக் கொன்று ஆரவாரித்தது எ-று. (வ - று.) சூடினான் வாகைச் சுடர்த்தெரியல்சூடுதலும் பாடினார் வெல்புகழைப் பல்புலவர் -கூடார் உடல்வே லழுவத் தொளிதிகழும் பைம்பூண் அடல்வேந்த னட்டார்த் தரசு. (இ - ள்.) ஒளியாற் சிறந்த வாகைமாலையைமலைந்தான்; மலைந்தானாகத் துதித்தார், பகைவெல்லும்கீர்த்தியை அறிவினையுடையோர் பலரும்; சத்துருக்களதுமாறுபாட்டினையுடைய அயிற்படைநடுவே ஒளி திகழும் பசும்பொன்னாற்செய்யப்பட்ட ஆபரணத்தினையும் மாறுபாட்டினையுமுடையவேந்தன் அரசுகொன்று ஆரவாரித்து எ-று. ஆர்த்துச் சூடினானென்க. (1) 156. வாகை அரவம் வெண்கண்ணியுங் கருங்கழலும் செங்கச்சுந் தகைபுனைந்தன்று. (இ - ள்.) வெள்ளைமாலையினையும் வலிய வீரக்கழலினையும்சிவந்த கச்சினையும் அழகிதாக அணிந்தது எ-று. வெண்கண்ணி-கொத்தான்வாகை. (வ - று.) அனைய வமரு ளயில்போழ் 1விழுப்புண் இனைய வினிக்கவலை யில்லை - புனைக அழலோ டிமைக்கு மணங்குடைவாண் மைந்தர் கழலோடு 3பூங்கண்ணி கச்சு. (இ - ள்.) அத்தன்மையவாகிய பூசலிலே வேல்பிளந்தசீரிய புண் இத்தன்மையவாயின; மேல் ஓர் துயரம் இல்லை; அணிக, நெருப்போடிலங்கும் பகைவர்க்கு வருத்தஞ்செய்தலுடைய வாண்மள்ளர், வீரக்கழலினையும் பொலிந்தமாலையினையும் கச்சினையும் எ-று. (2) 157. அரச வாகை பகலன்ன வாய்மொழி இகல்வேந்த னியல்புரைத்தன்று. (இ - ள்.) நுகத்திற் பகலாணிபோன்ற நடுநிலைச்சொல்லினையுடைய மாறுபாட்டாற் சிறந்த மன்னனது தன்மையைச் சொல்லியது எ-று. (வ - று.) காவ லமைந்தான் கடலுலகங் காவலால் ஓவ லறியா துயிர்க்குவகை - மேவருஞ்சீர்
1. குறள். 776. 2. பட். 206; பழ. 95; தஞ்சை.48. (பி-ம்)3. 'பூங்கண்ணிக்கச்சு' |