| தொடக்கம் | 
		
				| நொச்சிப் படலம் 
 | 
		
				|  | 
					
			
			|  | |  | 5. நொச்சிப் படலம் |  |  | நுவல் அருங் காப்பின் நொச்சி , ஏனை மறனுடைப் பாசி, ஊர்ச்செரு என்றா,
 செருவிடை வீழ்தல் , திண் பரிமறனே,
 எயிலது போரே, எயில்தனை அழித்தல் ,
 அழிபடை தாங்கல் , மகள் மறுத்து மொழிதல், என
 எச்சம் இன்றி எண்ணிய ஒன்பதும்
 நொச்சித் திணையும் , துறையும், ஆகும் .
 | 
 | உரை | 
		
			|  |  |  | 
					
			
			|  | |  | நொச்சி |  | 86. | ஏப்புழை ஞாயில் ஏந்துநிலை அரணம் காப்போர் சூடிய பூப் புகழ்ந்தன்று.
 | 
 | உரை | 
		
			|  |  |  | 
					
			
			|  | |  | மறனுடைப் பாசி |  | 87. | மறப்படை மற வேந்தர் துறக்கத்துச் செலவு உரைத்தன்று.
 | 
 | உரை | 
		
			|  |  |  | 
					
			
			|  | |  | ஊர்ச் செரு |  | 88. | அரு மிளையொடு கிடங்கு அழியாமைச் செரு மலைந்த சிறப்பு உரைத்தன்று .
 | 
 | உரை | 
		
			|  |  |  | 
					
			
			|  | |  | செருவிடை விழ்தல் |  | 89. | ஆழ்ந்து படு கிடங்கோடு அரு மிளை காத்து வீழ்ந்த வேலோர் விறல் மிகுத்தன்று.
 | 
 | உரை | 
		
			|  |  |  | 
					
			
			|  | |  | குதிரை மறம் |  | 90. | ஏமாண்ட நெடும் புரிசை வா மானது வகை உரைத்தன்று.
 | 
 | உரை | 
		
			|  |  |  | 
					
			
			|  | |  | எயிற் போர் |  | 91. | அயில் படையின் அரண் காக்கும், எயில் படைஞர் இகல் மிகுத்தன்று.
 | 
 | உரை | 
		
			|  |  |  | 
					
			
			|  | |  | எயில்தனை அழித்தல் |  | 92. | துணிவு உடைய தொடு கழலான் , அணி புரிசை அழிவு உரைத்தன்று.
 | 
 | உரை | 
		
			|  |  |  | 
					
			
			|  | |  | அழிபடை தாங்கல் |  | 93. | இழிபு உடன்று இகல் பெருக, அழி படை அரண் காத்தன்று.
 | 
 | உரை | 
		
			|  |  |  | 
					
			
			|  | |  | மகள் மறுத்து மொழிதல் |  | 94. | வெம் முரணான் மகள் வேண்ட, அம் மதிலோன் மறுத்து உரைத்தன்று.
 | 
 | உரை | 
		
			|  |  |  |