உழிஞைப் படலம்
 
6. உழிஞைப் படலம்
உழிஞை, ஓங்கிய குடைநாட் கோளே,
வாள்நாட் கோளே , முரச உழிஞை ,
கொற்ற உழிஞையோடு , அரச உழிஞை ,
கந்தழி என்றா , முற்று உழிஞையே,
காந்தள், புறத்திறை , ஆர் எயில் உழிஞை.
அருந்தோல் உழிஞை , குற்று உழிஞையொடு,
கோள் புறத்து உழிஞை, பாசி நிலையே,
ஏணி நிலையே , இலங்கு எயில் பாசி,
முது உழிஞையே , முந்து அகத்து உழிஞை,
முற்று முதிர்வே, யானை கைக்கோளே,
வேற்றுப்படை வரவே , உழுது வித்து இடுதல்.
வாள்மண்ணு நிலையே, மண்ணுமங்கலமே,
மகள் பால் இகலே , திறை கொண்டு பெயர்தல்,
அடிப்பட இருத்தல் ,தொகைநிலை, உளப்பட
இழும் என் சீர்த்தி இருபத்து ஒன்பதும்
உழிஞை என்மனார் உணர்ந்திசினோரே.
உரை
   
உழிஞை
95. முடிமிசை உழிஞை சூடி , ஒன்னார்
கொடி நுடங்கு ஆர் எயில் கொளக் கருதின்று.
உரை
   
குடை நாள் கோள்
96. செற்று அடையார் மதில் கருதிக்
கொற்ற வேந்தன் குடை நாள் கொண்டன்று.
உரை
   
வாள் நாள் கோள்
97. கலந்து அடையார் மதில் கருதி
வலம் தரு வாள் நாள் கொண்டன்று.
உரை
   
முரச உழிஞை
98. பொன் புனை உழிஞை சூடி மறி அருந்தும்,
திண் பிணி முரசநிலை உரைத்தன்று.
உரை
   
கொற்ற உழிஞை
99. அடையாதார் அரண் கொள்ளிய
படையோடு பரந்து எழுந்தன்று.
உரை
   
அரச உழிஞை
100. தொழில் காவல் மலிந்து இயலும்
பொழில் காவலன் புகழ் விளம்பின்று.
உரை
   
கந்தழி
101. மா உடைத் தார் மணிவண்ணன்
சோ உடைத்த மறம் நுவலின்று.
உரை
   
முற்று உழிஞை
102. ஆடு இயல் அவிர் சடையான்
சூடிய பூச் சிறப்பு உரைத்தன்று.
உரை
   
காந்தள்
103. கருங்கடலுள் மாத் தடிந்தான்
செழுங்காந்தள் சிறப்பு உரைத்தன்று.
உரை
   
புறத்திறை
104. மறத்துறை மலிந்து, மண்டி, மாற்றார்
விறல் கொடி மதிலின் புறத்து இறுத்தன்று.
உரை
   
ஆர் எயில் உழிஞை
105. வாஅள் மறவர், வணங்காதார்
நீஇள் மதிலின் நிலை உரைத்தன்று..
உரை
   
தோல் உழிஞை
106. வென்றியோடு , புகழ் விளைக்கும் எனத்
தொன்று வந்த தோல் மிகுத்தன்று.
உரை
   
குற்றுழிஞை
107. கருதாதார் மதில் குமரிமேல்
ஒரு தான் ஆகி இகல் மிகுத்தன்று.
உரை
   
இதுவுமது
108. வளை ஞரல. வயிர் ஆர்ப்ப
மிளை கடத்தலும் அத்துறை ஆகும்.
உரை
   
இதுவுமது
109. பாடு அருந் தோல் படை மறவர்,
ஆடலொடு அடையினும் அத்துறை ஆகும்.
உரை
   
புறத்து உழிஞை
110. விண் தோயும் மிளைகடந்து,
குண்டு அகழிப் புறத்து இறுத்தன்று.
உரை
   
பாசி நிலை
111. அடங்காதார் மிடல் சாயக்
கிடங்கிடைப் போர் மலைந்தன்று.
உரை
   
ஏணி நிலை
112. தொடு கழல் மறவர் துன்னித், துன்னார்
இடு சூட்டு இஞ்சியின் ஏணி சாத்தின்று.
உரை
   
எயில் பாசி
113. உடல் சினத்தார், கடி அரணம்
மிடல் சாய மேல் இவர்ந்தன்று.
உரை
   
முது உழிஞை
114. வேய் பிணங்கிய மிளை அரணம்,
பாய் புள்ளின் பரந்து இழிந்தன்று.
உரை
   
இதுவுமது
115. செருமதிலோர் சிறப்பு உரைத்தலும்
அரு முரணான் அத்துறை ஆகும்.
உரை
   
அகத்து உழிஞை
116. முரண் அவியச் சினம் சிறந்தோர்,
அரண் அகத்தோரை அமர் வென்றன்று.
உரை
   
முற்று முதிர்வு
117. அகத்தோன் காலை அதிர் முரசு இயம்பப்
புறத்தோன் வெஞ்சினப் பொலிவு உரைத்தன்று.
உரை
   
யானை கைக்கோள்
118. மாறுகொண்டார் மதில் அழிய,
ஏறும், தோட்டியும், எறிந்து கொண்டன்று.
உரை
   
வேற்றுப்படை வரவு
119. மொய் திகழ் வேலோன் முற்று விட்டு அகலப்
பெய் தார் மார்பின் பிறன் வரன் உரைத்தன்று.
உரை
   
உழுது வித்து இடுதல்
120. எண்ணார் பல் எயில் , கழுதை ஏர் உழுவித்து,
உண்ணா வரகொடு , கொள் , வித்தின்று.
உரை
   
வாள் மண்ணு நிலை
121. புண்ணிய நீரில் புரையோர் ஏத்த
மண்ணிய வாளின் மறம் கிளந்தன்று.
உரை
   
மண்ணு மங்கலம்
122. வணங்காதார் மதில் குமரியொடு
மணம் கூடிய மலிபு உரைத்தன்று.
உரை
   
மகள்பால் இகல்
123. மயில் சாயல் மகள் வேண்டிய
கயில் கழலோன் நிலை உரைத்தன்று
உரை
   
திறைகொண்டு பெயர்தல்
124. அடு திறல் அரணத்து அரசு வழிமொழியப்,
படு திறை கொண்டு பதிப் பெயர்ந்தன்று.
உரை
   
அடிப்பட இருத்தல்
125. பேணாதார் மறம் கால
ஆணை கொண்டு அடிப்பட இருந்தன்று.
உரை
   
தொகை நிலை
126. எம் மதிலின் இகல் வேந்தரும்
அம் மதிலின், அடி அடைந்தன்று.
உரை