| தொடக்கம் | 
		
				| தும்பைப் படலம் 
 | 
		
				|  | 
					
			
			|  | |  | 7. தும்பைப் படலம் |  |  | துன்ன அருங் கடும் போர்த் தும்பை, தும்பை அரவம். தன் நிகர் இல்லாத் தானை மறமே,
 யானை மறத்தொடு , குதிரை மறமே,
 தார்நிலை , தேர் மறம் , பாணது பாட்டே,
 இருவரும் தபுநிலை , எருமை மறமே.
 ஏம எருமை, நூழில் என்றா,
 நூழில் ஆட்டே , முன்தேர்க் குரவை,
 பின்தேர்க் குரவை, பேய்க் குரவையே,
 களிற்று உடனிலையே, ஒள்வாள் அமலை,
 தானை நிலையே , வெருவரு நிலையே,
 சிருங்கார நிலையே , உவகைக் கலுழ்ச்சி,
 தன்னை வேட்டல் , தொகைநிலை , உளப்பட
 நல் பொருள் தெரிந்தோர் நால் இரு - மூன்றும்
 வண் பூந் தும்பை வகை என மொழிப.
 | 
 | உரை | 
		
			|  |  |  | 
					
			
			|  | |  | தும்பை |  | 127. | செங்களத்து மறம் கருதிப் பைந்தும்பை தலை மலைந்தன்று.
 | 
 | உரை | 
		
			|  |  |  | 
					
			
			|  | |  | தும்பை அரவம் |  | 128. | பொன் புனைந்த கழல் அடியோன் தன் படையைத் தலையளித்தன்று.
 | 
 | உரை | 
		
			|  |  |  | 
					
			
			|  | |  | தானை மறம் |  | 129. | தாம் படைத்தலைக் கொள்ளாமை ஓம்படுத்த உயர்பு கூறின்று.
 | 
 | உரை | 
		
			|  |  |  | 
					
			
			|  | |  | இதுவுமது |  | 130. | பூம்பொழிற் புறம் காவலனை ஒம்படுத்தற்கும் உரித்து என மொழிப.
 | 
 | உரை | 
		
			|  |  |  | 
					
			
			|  | |  | இதுவுமது |  | 131. | வேல் தானை மறம் கூறி மாற்றாரது அழிபு இரங்கினும் ஆற்றின் உணரின் அத்துறை ஆகும்.
 | 
 | உரை | 
		
			|  |  |  | 
					
			
			|  | |  | யானை மறம் |  | 132. | எழும் அரவக் கடல் தானையான், மழகளிற்றின் மறம் கிளந்தன்று.
 | 
 | உரை | 
		
			|  |  |  | 
					
			
			|  | |  | குதிரை மறம் |  | 133. | எறி படையான் இகல் அமருள் செறி படை மான் திறம் கிளந்தன்று
 | 
 | உரை | 
		
			|  |  |  | 
					
			
			|  | |  | தார் நிலை |  | 134. | முன் எழு தரு படை தாங்குவன் என், மன்னவற்கு மறம் கிளந்தன்று.
 | 
 | உரை | 
		
			|  |  |  | 
					
			
			|  | |  |  |  | 135. | ஒரு குடை மன்னனைப் பல குடை நெருங்கச் செருவிடைத் தமியன் தாங்கற்கும் உரித்தே.
 | 
 | உரை | 
		
			|  |  |  | 
					
			
			|  | |  | தேர் மறம் |  | 136. | முறி மலர்த்தார் வய வேந்தன் செறி மணித்தேர்ச் சிறப்பு உரைத்தன்று.
 | 
 | உரை | 
		
			|  |  |  | 
					
			
			|  | |  | பாண்பாட்டு |  | 137. | வெண் கோட்ட களிறு எறிந்து செங்களத்து வீழ்ந்தார்க்குக் கைவல் யாழ்ப்பாணர் கடன் இறுத்தன்று.
 | 
 | உரை | 
		
			|  |  |  | 
					
			
			|  | |  | இருவரும் தபு நிலை |  | 138. | பொரு படை களத்து அவிய இரு வேந்தரும் இகல் அவிந்தன்று.
 | 
 | உரை | 
		
			|  |  |  | 
					
			
			|  | |  | எருமை மறம் |  | 139. | வெயர் பொடிப்பச் சினம் கடைஇப் பெயர் படைக்குப் பின் நின்றன்று.
 | 
 | உரை | 
		
			|  |  |  | 
					
			
			|  | |  | ஏம எருமை |  | 140. | குடை மயங்கிய வாள் அமருள், படை மயங்கப் பாழி கொண்டன்று.
 | 
 | உரை | 
		
			|  |  |  | 
					
			
			|  | |  | நூழில் |  | 141. | கழல் வேந்தர் படை விலங்கி அழல் வேல் திரித்து ஆட்டு அமர்ந்தன்று.
 | 
 | உரை | 
		
			|  |  |  | 
					
			
			|  | |  | நூழில் ஆட்டு |  | 142. | களம் கழுமிய படை இரிய, உளம் கிழித்த வேல் பறித்து ஒச்சின்று.
 | 
 | உரை | 
		
			|  |  |  | 
					
			
			|  | |  | முன் தேர்க் குரவை |  | 143. | எழு உறழ் திணி தோள் வேந்தன் , வெல் தேர் முழு வலி வயவர் முன் ஆடின்று.
 | 
 | உரை | 
		
			|  |  |  | 
					
			
			|  | |  | பின் தேர்க் குரவை |  | 144. | கருங்கழல் மறவரொடு வெள்வளை விறலியர், பெருந்தகை தேரின் பின் ஆடின்று.
 | 
 | உரை | 
		
			|  |  |  | 
					
			
			|  | |  | பேய்க் குரவை |  | 145. | மன்னன் ஊரும் மறம் மிகு மணித்தேர்ப் பின்னும் , முன்னும் , பேய் ஆடின்று.
 | 
 | உரை | 
		
			|  |  |  | 
					
			
			|  | |  | களிற்றுடனிலை |  | 146. | ஒளிற்று எஃகம் பட வீழ்ந்த களிற்றின் கீழ்க் கண்படுத்தன்று.
 | 
 | உரை | 
		
			|  |  |  | 
					
			
			|  | |  | ஒள்வாள் அமலை |  | 147. | வலி கெழு தோள் வாள் வயவர், ஒலி கழலான் உடன் ஆடின்று.
 | 
 | உரை | 
		
			|  |  |  | 
					
			
			|  | |  | தானை நிலை |  | 148. | இரு படையும் மறம் பழிச்சப் பொரு களத்துப் பொலிவு எய்தின்று.
 | 
 | உரை | 
		
			|  |  |  | 
					
			
			|  | |  | வெருவு அரு நிலை |  | 149. | விலங்கு அமருள் வியல் அகலம் வில் உதைத்த கணை கிழிப்ப, நிலம் தீண்டா வகைப் பொலிந்த நெடுந்தகை நிலை உரைத்தன்று.
 | 
 | உரை | 
		
			|  |  |  | 
					
			
			|  | |  | சிருங்கார நிலை |  | 150. | பகை புகழக் கிடந்தானை முகை முறுவலார் முயக்கு அமர்ந்தன்று.
 | 
 | உரை | 
		
			|  |  |  | 
					
			
			|  | |  | உவகைக் கலுழ்ச்சி |  | 151. | வாள் வாய்த்த வடு ஆழ் யாக்கைக் கேள் கண்டு கலுழ்ந்து உவந்தன்று.
 | 
 | உரை | 
		
			|  |  |  | 
					
			
			|  | |  | தன்னை வேட்டல் |  | 152. | தம் இறைவன் விசும்பு அடைந்தென வெம் முரணான் உயிர் வேட்டன்று.
 
 | 
 | உரை | 
		
			|  |  |  | 
					
			
			|  | |  | இதுவுமது |  | 153. | காய் கதிர் நெடு வேல் கணவனைக் காணிய ஆயிழை சேறலும் அத்துறை ஆகும்.
 | 
 | உரை | 
		
			|  |  |  | 
					
			
			|  | |  | தொகைநிலை |  | 154. | அழிவு இன்று புகழ் நிறீஇ ஒழிவு இன்று களத்து ஒழிந்தன்று.
 | 
 | உரை | 
		
			|  |  |  |