| தொடக்கம் | 
		
				| வாகைப் படலம் 
 | 
		
				|  | 
					
			
			|  | |  | 8. வாகைப் படலம் |  |  | சீர்சால் வாகை , வாகை அரவம், அரச வாகை , முரச வாகை,
 மறக்கள வழியொடு , கள வேள்விய்யே,
 முன்தேர்க் குரவை , பின்தேர்க் குரவை,
 பார்ப்பன வாகை, வாணிக வாகை,
 வேளாண் வாகை , வாணிக வாகை,
 அறிவன் வாகை, தாபத வாகை,
 கூதிர்ப் பாசறை, வாடைப் பாசறை,
 அரச முல்லை , பார்பான் முல்லை,
 அவைய முல்லை, கணிவன் முல்லை,
 மூதில் முல்லை,ஏறு ஆண் முல்லை,
 வல் ஆண் முல்லை,காவல் முல்லை,
 பேர் ஆண் முல்லை , மற முல்லையே,
 குடை முல்லையொடு , கண்படை நிலையே,
 அவிப்பலி என்றா , சால்பு முல்லை,
 கிணைறிலை , ஏனைப் பொருளொடு புகறல்,
 அருளொடு நீங்கல், உளப்படத் தொகைஇ,
 மூன்று தலை இட்ட மூ-ஈர்-ஐந்தும்
 வான் தோய் வாகைத் திணையது வகையே.
 | 
 | உரை | 
		
			|  |  |  | 
					
			
			|  | |  | வாகை |  | 155. | இலை புனை வாகை சூடி, இகல் மலைந்து, அலை கடல் தானை அரசு அட்டு ஆர்த்தன்று.
 | 
 | உரை | 
		
			|  |  |  | 
					
			
			|  | |  | வாகை அரவம் |  | 156. | வெண்கண்ணியும் கருங்கழலும் செங்கச்சும் தகை புனைந்தன்று.
 | 
 | உரை | 
		
			|  |  |  | 
					
			
			|  | |  | அரச வாகை |  | 157. | பகல் அன்ன வாய்மொழி இகல் வேந்தன் இயல்பு உரைத்தன்று.
 | 
 | உரை | 
		
			|  |  |  | 
					
			
			|  | |  | முரச வாகை |  | 158. | ஒலி கழலான் அகல் நகருள் பலி பெறு முரசின் பண்பு உரைத்தன்று.
 | 
 | உரை | 
		
			|  |  |  | 
					
			
			|  | |  | மறக்கள வழி |  | 159. | முழவு உறழ் திணி தோளானை உழவனாக உரை மலிந்தன்று.
 | 
 | உரை | 
		
			|  |  |  | 
					
			
			|  | |  | கள வேள்வி |  | 160. | அடு திறல் அணங்கு ஆர விடு திறலான் களம் வேட்டன்று.
 | 
 | உரை | 
		
			|  |  |  | 
					
			
			|  | |  | முன் தேர்க் குரவை |  | 161. | வென்று ஏந்திய விறல் படையோன் முன் தேர்க்கண் அணங்கு ஆடின்று.
 | 
 | உரை | 
		
			|  |  |  | 
					
			
			|  | |  | பின் தேர்க் குரவை |  | 162. | பெய் கழலான் தேரின்பின் மொய் வளை விறலியர் வயவரொடு ஆடின்று.
 | 
 | உரை | 
		
			|  |  |  | 
					
			
			|  | |  | பார்ப்பன வாகை |  | 163. | கேள்வியால் சிறப்பு எய்தியானை வேள்வியான் விறல் மிகுத்தன்று.
 | 
 | உரை | 
		
			|  |  |  | 
					
			
			|  | |  | வாணிக வாகை |  | 164. | செறு தொழிலின் சேண் நீங்கியான் அறு தொழிலும் எடுத்து உரைத்தன்று.
 | 
 | உரை | 
		
			|  |  |  | 
					
			
			|  | |  | வேளாண் வாகை |  | 165. | மேல் மூவரும் மனம் புகல வாய்மையான் வழி ஒழுகின்று.
 | 
 | உரை | 
		
			|  |  |  | 
					
			
			|  | |  | பொருந வாகை |  | 166. | புகழொடு பெருமை நோக்கி யாரையும் இகழ்தல் ஓம்பு என எடுத்து உரைத்தன்று.
 | 
 | உரை | 
		
			|  |  |  | 
					
			
			|  | |  | அறிவன் வாகை |  | 167. | புகழ் நுவல முக்காலமும் நிகழ்பு அறிபவன் இயல்பு உரைத்தன்று.
 | 
 | உரை | 
		
			|  |  |  | 
					
			
			|  | |  | தாபத வாகை |  | 168. | தாபத முனிவர் தவத்தொடு முயங்கி ஓவுதல் அறியா ஒழுக்கு உரைத்தன்று.
 | 
 | உரை | 
		
			|  |  |  | 
					
			
			|  | |  | கூதிர்ப் பாசறை |  | 169. | கூற்று அனையான் வியன் கட்டூர்க் கூதிர் வான் துளி வழங்க, ஆற்றாமை நனிபெருகவும் அயில் வேலோன் அளி துறந்தன்று.
 | 
 | உரை | 
		
			|  |  |  | 
					
			
			|  | |  | வாடைப் பாசறை |  | 170. | வெந்திறலான் வியன் பாசறை வேல் வயவர் விதிர்ப்பு எய்த வந்து உலாய்த் துயர் செய்யும் வாடையது மலிபு உரைத்தன்று.
 | 
 | உரை | 
		
			|  |  |  | 
					
			
			|  | |  | அரச முல்லை |  | 171. | செருமுனை உடற்றும் செஞ்சுடர் நெடுவேல் இரு நிலம் காவலன் இயல்பு உரைத்தன்று.
 | 
 | உரை | 
		
			|  |  |  | 
					
			
			|  | |  | பார்ப்பன முல்லை |  | 172. | கால் மலியும் நறுந் தெரியல் கழல் வேந்தர் இகல் அவிக்கும் நான் மறையோன் நலம் பெருகும் நடுவு நிலை உரைத்தன்று.
 | 
 | உரை | 
		
			|  |  |  | 
					
			
			|  | |  | அவைய முல்லை |  | 173. | நவை நீங்க நடுவு கூறும் அவை மாந்தர் இயல்பு உரைத்தன்று.
 | 
 | உரை | 
		
			|  |  |  | 
					
			
			|  | |  | கணிவன் முல்லை |  | 174. | துணிபு உணரும் தொல் கேள்விக் கணிவனது புகழ் கிளந்தன்று.
 | 
 | உரை | 
		
			|  |  |  | 
					
			
			|  | |  | மூதில் முல்லை |  | 175. | அடல் வேல் ஆடவர்க்கு அன்றியும் , அவ் இல் மடவரல் மகளிர்க்கும் மறம் மிகுத்தன்று.
 | 
 | உரை | 
		
			|  |  |  | 
					
			
			|  | |  | ஏறு ஆண் முல்லை |  | 176. | மாறு இன்றி மறம் கனலும் ஏறு ஆண் குடி எடுத்து உரைத்தன்று.
 | 
 | உரை | 
		
			|  |  |  | 
					
			
			|  | |  | வல் ஆண் முல்லை |  | 177. | இல்லும் பதியும் இயல்பும் கூறி நல் ஆண்மையை நலம் மிகுத்தன்று.
 | 
 | உரை | 
		
			|  |  |  | 
					
			
			|  | |  | காவல் முல்லை |  | 178. | தவழ் திரை முழங்கும் தண் கடல் வேலிக் கமழ் தார் மன்னவன் காவல் மிகுத்தன்று.
 | 
 | உரை | 
		
			|  |  |  | 
					
			
			|  | |  |  |  | 179. | தக்காங்குப் பிறர் கூறினும் அத் துறைக்கு உரித்து ஆகும்.
 | 
 | உரை | 
		
			|  |  |  | 
					
			
			|  | |  | பேர் ஆண் முல்லை |  | 180. | உளம் புகல மற வேந்தன் களம் கொண்ட சிறப்பு உரைத்தன்று.
 | 
 | உரை | 
		
			|  |  |  | 
					
			
			|  | |  | மற முல்லை |  | 181. | வெள்வாள் வேந்தன் வேண்டியது ஈயவும் கொள்ளா மறவன் கொதிப்பு உரைத்தன்று.
 | 
 | உரை | 
		
			|  |  |  | 
					
			
			|  | |  | குடை முல்லை |  | 182. | மொய் தாங்கிய முழு வலித் தோள் கொய் தாரான் குடை புகழ்ந்தன்று.
 | 
 | உரை | 
		
			|  |  |  | 
					
			
			|  | |  | கண் படை நிலை |  | 183. | மண் கொண்ட மற வேந்தன் கண் படை நிலை மலிந்தன்று.
 | 
 | உரை | 
		
			|  |  |  | 
					
			
			|  | |  | அவிப் பலி |  | 184. | வெள்வாள் அமருள் செஞ்சோறு அல்லது உள்ளா மைந்தர் உயிர்ப் பலி கொடுத்தன்று.
 | 
 | உரை | 
		
			|  |  |  | 
					
			
			|  | |  | சால்பு முல்லை |  | 185. | வான் தோயும் மலை அன்ன சான்றோர்தம் சால்பு உரைத்தன்று.
 | 
 | உரை | 
		
			|  |  |  | 
					
			
			|  | |  | கிணை நிலை |  | 186. | தண் பணை வயல் உழவனைத் தெள் கிணைவன் திருந்து புகழ் கிளந்தன்று.
 | 
 | உரை | 
		
			|  |  |  | 
					
			
			|  | |  | பொருளொடு புகறல் |  | 187. | வையகத்து விழைவு அறுத்து மெய்யாய பொருள் நயந்தன்று.
 | 
 | உரை | 
		
			|  |  |  | 
					
			
			|  | |  | அருளொடு நீங்கல் |  | 188. | ஒலி கடல் வையகத்து நலிவு கண்டு நயப்பு அவிந்தன்று.
 | 
 | உரை | 
		
			|  |  |  |