பாடாண் படலம்
 
9. பாடாண் படலம்
பாடாண் பாட்டோ, வாயில் நிலையே,
கடவுள் வாழ்த்தொடு , பூவை நிலையே,
பரிசில் துறையே, இயல்மொழி வாழ்த்தே,
கண்படை நிலையே, துயிலெடை நிலையே,
மங்கல நிலையொடு , விளக்கு நிலையே,
கபிலை கண்ணிய புண்ணிய நிலையே,
வேள்வி நிலையொடு, வெள்ளி நிலையே,
நாடு வாழ்த்தொடு , கிணையது நிலையே,
களவழி வாழ்த்தே,
வீற்று இனிது இருந்த பெருமங்கலமே,
குடுமி களைந்த புகழ் சாற்று நிலையே,
மண மங்லமே. பொலிவு மங்கலமே,
நாள் மங்கலமே, பரிசில் நிலையே,
பரிசில் விடையே, ஆள்வினை வேள்வி,
பாண் ஆற்றுப்படையே, கூத்தர் ஆற்றுப்படையே,
பொருந் ஆற்றுப்படையொடு, விறலி ஆற்றப்படையே,
வாயுறை வாழ்த்தே, செவியறிவுறூஉக்,
குடை மங்கலமொடு , வள் மங்கலமே,
மண்ணு மங்கலமே, ஒம்படை , ஏனைப்
புறநிலை வாழ்த்தும் , உள்ப்படத் தொகைஇ;
அமரர்கண் முடியும் அறுவகை ஆகிய
கொடிநிலை , கந்தழி , வள்ளி , குணம் சால்
புலவரை அவர்வயின் புகழ்ந்து ஆற்றுப்படுத்தல் .
புகழ்ந்தனர் பரவல். பழிச்சினர்ப் பணிதல்,
நிகழ்ந்த காம்ப் பகுதியுள் தோன்றிய
கைக்கிளை வகையும் , பெருந்திணை வகையும் ,
நல் துனி நவின்ற பாடாண் பாட்டும் ,
கடவுள் பக்கத்தும் , ஏணோர் பக்கத்தும் ,
மடவரல் மகளிர் மகிழ்ந்த குழவியும் ,ஊரின்
கண்ணே தோன்றிய காமப் பகுதியொடு,
ஆங்கு அவ் ஆறு-எண் பகுதிப் பொருளும்
பாங்குற உரைப்பது பாடான் பாட்டே.
உரை
   
பாடாண் பாட்டு
189. ஒளியும், ஆற்றலும் , ஓம்பா ஈகையும்,
அளியும், என்று இவை ஆய்ந்து உரைத்தன்று.
உரை
   
வாயில் நிலை
190. புரவலன் நெடுங்கடை குறுகிய என் நிலை,
கரவின்று உரை எனக் காவலர்க்கு உரைத்தன்று.
உரை
   
கடவுள் வாழ்த்து
191. காவல் கண்ணிய கழலோன் கைதொழும்
மூவரில் ஒருவனை எடுத்து உரைத்தன்று.
உரை
   
பூவை நிலை
192. கறவை காவலன் நிறனொடு பொரீஇப்
புறவு அலர் பூவைப்பூப் புகழ்ந்தன்று.
உரை
   
பரிசில் துறை
193. மண்ணகம் காவல் மன்னன் முன்னர்
எண்ணிய பரிசில் இது என உரைத்தன்று.
உரை
   
இயல் மொழி வாழ்த்து
194. இன்னோர் இன்னவை கொடுத்தார் , நீயும்
அன்னோர் போல அமை எமக்கு ஈக என ,
என்னோரும் அறிய எடுத்து உரைத்தன்று.
உரை
   
195. மயல் அறு சீர்த்தி மான் தேர் மன்னவன்
இயல்பே மொழியினும் அத்துறை ஆகும்.
உரை
   
கண்படை நிலை
196. நெடுந்தேர்த் தானை நீறு பட நடக்கும்
கடுந்தேர் மன்னவன் கண்படை மலிந்தன்று.
உரை
   
துயிலெடை நிலை
197. அடு திறல் மன்னரை அருளிய எழுக எனத்
தொடு கழல் மன்னனைத் துயில் எடுப்பின்று.
உரை
   
மங்கல நிலை
198. கங்குல் கனை துயில் எழுந்தோன் முன்னர்
மங்கலம் கூறிய மலிவு உரைத்தன்று.
உரை
   
199. மன்னிய சிறப்பின் மங்கல மரபில்
துன்னினன் என்றலும் அத்துறை ஆகும்.
உரை
   
விளக்கு நிலை
200. அளப்பு அருங் கடல் தானையான்
விளக்கு நிலை விரித்து உரைத்தன்று.
உரை
   
201. அடர் அவிர் பைம்பூண் வேந்தன் தன்னைச்
சுடரொடு பொருவினும் அத்துறை ஆகும்.
உரை
   
கபிலைகண்ணிய புண்ணிய நிலை
202. அண்ணல் நான்மறை அந்தணாளர்க்குக்
கண்ணிய கபிலை நிலை உரைத்தன்று.
உரை
   
வேள்வி நிலை
203. அந்தம் இல் புகழான் அமரரும் மகிழச்
செந்தீ வேட்ட சிறப்பு உரைத்தன்று.
உரை
   
வெள்ளி நிலை
204. துயர் தீரப் புயல் தரும் என
உயர் வெள்ளி நிலை உரைத்தன்று.
உரை
   
நாடு வாழ்த்து
205. தாள் தாழ் தடக் கையான்
நாட்டது வளம் உரைத்தன்று.
உரை
   
கிணை நிலை
206. திருக்கிளரும் அகல் கோயில்
அரிக் கிணைவன் வளம் உரைத்தன்று.
உரை
   
களவழி வாழ்த்து
207. செங்களத்துச் செழுஞ்செல்வம்
வெண்டுறை யாழ்ப்பாணர் விளம்பின்று.
உரை
   
வீற்று இனிது இருந்த பெருமங்கலம்
208. கூற்று இருந்த கொலை வேலான்
வீற்று இருந்த விறல் மிகுத்தன்று.
உரை
   
குடுமி களைந்த புகழ் சாற்று நிலை
209. நெடுமதில் எறிந்து , நிரை தார் மன்னன்
குடுமி களைந்த மலிவு உரைத்தன்று.
உரை
   
மண மங்கலம்
210. இகல் அடு தோள் எறி வேல் மன்னன்,
மகளிரொடு மணந்த மங்கலம் கூறின்று.
உரை
   
பொலிவு மங்கலம்
211. வேல் வேந்தன் உள் மகிழப்
பாலன் பிறப்பப் பலர் புகழ்ந்தன்று.
உரை
   
நாள் மங்கலம்
212. அறம் தரு செங்கோல் அருள் வெய்யோன்
பிறந்தநாள் சிறப்பு உரைத்தன்று.
உரை
   
பரிசில் நிலை
213. புரவலன் மகிழ் தூங்க
இரவலன் கடைக் கூடின்று.
உரை
   
பரிசில் விடை
214. வேந்தன் உள் மகிழ வெல்புகழ் அறைந்தோர்க்கு
ஈந்து பரிசில் இன்புற விடுத்தன்று.
உரை
   
ஆள்வினை வேள்வி
215. வினை முற்றிய கனை கழலோன்,
மனை வேள்வி மலிவு உரைத்தன்று.
உரை
   
பாண் ஆற்றுப்படை
216. சேண் ஓங்கிய வரை அதரில்,
பாணனை ஆற்றுப் படுத்தன்று.
உரை
   
கூத்தர் ஆற்றுப்படை
217. ஏத்திச் சென்ற இரவலன்,
கூத்தரை ஆற்றுப் படுத்தன்று.
உரை
   
பொருநர் ஆற்றுப்படை
218. பெரு நல்லான் உ.ழையீர் ஆக எனப்
பொருநனை ஆற்றுப் படுத்தன்று.
உரை
   
விறலி ஆற்றுப்படை
219. திறல் வேந்தன் புகழ் பாடும்,
விறலியை ஆற்றுப் படுத்தன்று.
உரை
   
வாயுறை வாழ்த்து
220. பின் பயக்கும் எம் சொல் என ,
முன் படர்ந்த மொழி மிகுத்தன்று.
உரை
   
செவியறிவுறூஉ
221. மறம் திரிவு இல்லா மன் பெரும் சூழ்ச்சி,
அறம் தெரி கோலாற்கு அறிய உரைத்தன்று.
உரை
   
குடை மங்கலம்
222. நால் திசையும் புகழ் பெருக
வீற்று இருந்தான் குடை புகழ்ந்தன்று.
உரை
   
வாள் மங்கலம்
223. கயக்கு அருங்கடல் தானை
வயக் களிற்றான் வாள் புகழ்ந்தன்று.
உரை
   
மண்ணு மங்கலம்
224. எண் அருஞ்சீர்த்தி இறைவன் எய்தி
மண்ணு மங்கலம் மலிவு உரைத்தன்று.
உரை
   
ஓம்படை
225. இன்னது செய்தல் இயல்பு என இறைவன்
முன் நின்று, அறிவன் மொழி தொடர்ந்தன்று.
உரை
   
புறநிலை வாழ்த்து
226. வழிபடு தெய்வம் நின் புறம் காப்ப,
வழி வழி சிறக்க என வாய் மொழிந்தன்று.
உரை
   
கொடி நிலை
227. மூவர் கொடியுள்ளும் ஒன்றொடு பொரீஇ,
மேவரு மன்னவன் கொடி புகழ்ந்தன்று.
உரை
   
கந்தழி
228. சூழ நேமியான் சோ எறிந்த
வீழாச் சீர் விறல் மிகுத்தன்று.
உரை
   
வள்ளி
229. பூண் முலையார் மனம் உருக
வேல் முருகற்கு வெறி ஆடின்று.
உரை
   
புலவர் ஆற்றுப்படை
230. இருங்கண் வானத்து இமையோர் உழைப்
பெரும் புலவனை ஆற்றுப் படுத்தன்று
உரை
   
புகழ்ந்தனர் பரவல்
231. இன்னது ஒன்று எய்துதும் இருநிலத்து யாம் எனத்
துன்ன அருங் கடவுள் தொடு கழல் தொழுதன்று.
உரை
   
பழிச்சினர் பணிதல்
232. வயங்கிய புகழ் வானவனைப்
பயன் கருதிப் பழிச்சினர்ப் பணிந்தன்று.
உரை
   
கைக்கிளை
233. தண்டாக் காதல் தளர் இயல் தலைவன்
வண் தார் விரும்பிய வகை உரைத்தன்று.
உரை
   
பெருந்திணை
234. பெய் கழல் பெருந்தகை பேணா முயக்கு இவர்ந்து,
மல்கு இருள் செல்வோள் வகை உரைத்தன்று.
உரை
   
புலவி பொருளாகத் தோன்றிய பாடாண் பாட்டு
235. வில் ஏர் நுதலி, விறலோன் மார்பம்
புல்லேம் யாம் எனப் புலந்து உரைத்தன்று.
உரை
   
கடவுள் மாட்டு கடவுள் பெண்டிர் நயந்த பக்கம்
236. இமையா நாட்டத்து இலங்கிழை மகளிர்
அமையாக் காதல் அமரரை மகிழ்ந்தன்று.
உரை
   
கடவுள் மாட்டு மானிடப் பெண்டிர் நயந்த பக்கம்
237. முக் கணான் முயக்கம் வேட்ட
மக்கட் பெண்டிர் மலிவு உரைத்தன்று.
உரை
   
குழவிக்கண் தோன்றிய காமப் பகுதி
238. இள மைந்தர் நலம் வேட்ட
வள மங்கையர் வகை உரைத்தன்று.
உரை
   
ஊரின்கண் தோன்றிய காமப் பகுதி
239. நீங்காக் காதல் மைந்தரும் மகளிரும்
பாங்கு உறக் கூடும் பதி உரைத்தன்று.
உரை