| தொடக்கம் | 
		
				| பொது இயல் படலம் 
 | 
		
				|  | 
					
			
			|  | |  | 10. பொது இயல் படலம் |  |  | சீர்சால் போந்தை , வேம்போடு , ஆரே, உன்ன நிலையே, ஏழக நிலையே,
 கழல் நிலை , ஏனைக் கல் காண்டல்லே,
 கல்கோள் நிலையே, கல் நீர்ப்படுத்தல்,
 கல் நடுதல்லே, கல்முறை பழிச்சல்,
 இல்கொண்டு புகுதல், என்ற பன்னிரண்டும்
 பொது இயல் பால என்மனார் புலவர்.
 | 
 | உரை | 
		
			|  |  |  | 
					
			
			|  | |  | போந்தை |  | 240. | கலவா மன்னர் கண்ணுறு ஞாட்பின் புல வேல் வானவன் பூப் புகழ்ந்தன்று.
 | 
 | உரை | 
		
			|  |  |  | 
					
			
			|  | |  | வேம்பு |  | 241. | விரும்பார் அமரிடை வெல் போர் வழுதி சுரும்பார் முடி மிசைப் பூப் புகழ்ந்தன்று.
 | 
 | உரை | 
		
			|  |  |  | 
					
			
			|  | |  | ஆர் |  | 242. | விறல் படை மறவர் வெஞ்சமம் காணின் மறப் போர்ச் செம்பியன் மலைப் பூ உரைத்தன்று.
 | 
 | உரை | 
		
			|  |  |  | 
					
			
			|  | |  | உன்ன நிலை |  | 243. | துன்ன அருஞ்சிறப்பின் தொடு கழல் மன்னனை உன்னம் சேர்த்தி உறு புகழ் மலிந்தன்று.
 | 
 | உரை | 
		
			|  |  |  | 
					
			
			|  | |  | ஏழக நிலை |  | 244. | ஏழகம் ஊரினும் இன்னன் என்று அவன் தாழ்வில் ஊக்கமொடு தகை புகழ்ந்தன்று.
 | 
 | உரை | 
		
			|  |  |  | 
					
			
			|  | |  |  |  | 245. | ஏந்து புகழ் உலகின் இளமை நோக்கான் வேந்து நிற்றலும் , ஏழக நிலையே.
 | 
 | உரை | 
		
			|  |  |  | 
					
			
			|  | |  | கழல் நிலை |  | 246. | அடு முரண் அகற்றும் ஆள் உகும் ஞாட்பில் கடு முரண் வயவன் கழல் புனைந்தன்று.
 | 
 | உரை | 
		
			|  |  |  | 
					
			
			|  | |  | கல் காண்டல் |  | 247. | ஆனா வென்றி அமரில் வீழ்ந்தோற்குக் கானம் நீளிடைக் கல் கண்டன்று.
 | 
 | உரை | 
		
			|  |  |  | 
					
			
			|  | |  | கல் கோள் நிலை |  | 248. | மண் மருளத் துடி கறங்க விண் மேயாற்குக் கல் கொண்டன்று.
 | 
 | உரை | 
		
			|  |  |  | 
					
			
			|  | |  | கல் நீர்ப் படுத்தல் |  | 249. | வண்டு சூழ் தாமம் புடையே அலம் வரக் கண்டு கொண்ட கல் நீர்ப் படுத்தன்று.
 | 
 | உரை | 
		
			|  |  |  | 
					
			
			|  | |  | இதுவுமது |  | 250. | ஓங்கிய கல் உய்த்து ஒழுக்கல் ஆங்கு எண்ணினும் அத்துறை ஆகும்.
 | 
 | உரை | 
		
			|  |  |  | 
					
			
			|  | |  | கல் நடுதல் |  | 251. | அவன் பெயர் கல் மிசைப் பொறித்துக் கவின் பெறக் கல் நாட்டின்று.
 | 
 | உரை | 
		
			|  |  |  | 
					
			
			|  | |  | கல் முறை பழிச்சல் |  | 252. | நிழல் அவிர் எழில் மணிப் பூண் கழல் வெய்யோன் கல் வாழ்த்தின்று.
 | 
 | உரை | 
		
			|  |  |  | 
					
			
			|  | |  | இல் கொண்டு புகுதல் |  | 253. | வேத்து அமருள் விளிந்தோன் கல் என ஏத்தினர் துவன்றி இல் கொண்டு புக்கன்று.
 | 
 | உரை | 
		
			|  |  |  |