| தொடக்கம் | 
		
				| காஞ்சிப் பொது இயல் 
 | 
		
				|  | 
					
			
			|  | |  | காஞ்சிப் பொது இயல் |  |  | மூதுரை பொருந்திய முதுமொழிக் காஞ்சி, பெருங் காஞ்சிய்யே , பொருள்மொழிக் காஞ்சி,
 புலவர் ஏத்தும் புத்தேள் நாட்டொடு,
 முதுகாஞ்சிய்யொடு , காடுவாழ்த்து, உளப்பட
 மை அறு சீர்த்தி வரும் இரு - மூன்றும்
 பொய் தீர் காஞ்சிப் பொது இயல் பால.
 | 
 | உரை | 
		
			|  |  |  | 
					
			
			|  | |  | முதுமொழிக் காஞ்சி |  | 269. | பலர் புகழ் புலவர் பன்னினர் தெரியும் உலகியல் பொருள் முடிபு உணரக் கூறின்று.
 | 
 | உரை | 
		
			|  |  |  | 
					
			
			|  | |  | பெருங் காஞ்சி |  | 270. | மலை ஓங்கிய மா நிலத்து நிலையாமை நெறி உரைத்தன்று.
 | 
 | உரை | 
		
			|  |  |  | 
					
			
			|  | |  | பொருள் மொழிக் காஞ்சி |  | 271. | எரிந்து இலங்கு சடைமுடி முனிவர் புரிந்து கண்ட பொருள் மொழிந்தன்று.
 | 
 | உரை | 
		
			|  |  |  | 
					
			
			|  | |  | புலவர் ஏத்தும் புத்தேள் நாடு |  | 272. | நுழை புலம் படர்ந்த நோய் அறு காட்சி விழை புலம் கடந்தோர் வீடு உரைத்தன்று.
 | 
 | உரை | 
		
			|  |  |  | 
					
			
			|  | |  | முது காஞ்சி |  | 273. | தலை வரும் பொருளைத் தக்காங்கு உணர்த்தி நிலை நிலையாமை நெறிப்பட உரைத்தன்று.
 | 
 | உரை | 
		
			|  |  |  | 
					
			
			|  | |  | காடு வாழ்த்து |  | 274. | பல்லவர்க்கு இரங்கும் பாடு இமிழ் நெய்தல் கல்லென ஒலிக்கும் காடு வாழ்த்தின்று.
 | 
 | உரை | 
		
			|  |  |  |