| தொடக்கம் | 
		
				| முல்லைப் பொது இயல் 
 | 
		
				|  | 
					
			
			|  | |  | முல்லைப் பொது இயல் |  |  | சீர்சால் முல்லையொடு , கார்முல்லை என்றா, தேர்முல்லையொடு , நாள்முல்லை என்றா,
 இல்ஆண் முல்லையொடு , பகட்டு முல்லை என்றா,
 பால் முல்லையொடு , கற்பு முல்லை என்று ஆங்கு
 இரு - நால் முல்லையும் பொது இயல் பால்.
 | 
 | உரை | 
		
			|  |  |  | 
					
			
			|  | |  | முல்லை |  | 275. | தட வரை மார்பன் தன் அமர் காதல் மடவரல் புணர்ந்த மகிழ்ச்சிநிலை உரைத்தன்று.
 | 
 | உரை | 
		
			|  |  |  | 
					
			
			|  | |  | கார் முல்லை |  | 276. | அருந்திறல் கட்டூர் அவர் வாரா முன் கருங்கடல் முகந்து கார் வந்தன்று.
 | 
 | உரை | 
		
			|  |  |  | 
					
			
			|  | |  | தேர் முல்லை |  | 277. | உருத்து எழும் மன்னர் ஒன்னார் தம்நிலை திருத்திய காதலர் தேர் வரவு உரைத்தன்று.
 | 
 | உரை | 
		
			|  |  |  | 
					
			
			|  | |  | நாண் முல்லை |  | 278. | செறுநர் நாணச் சேயிழை அரிவை வறுமனை வைகித் தற்காத்தன்று
 | 
 | உரை | 
		
			|  |  |  | 
					
			
			|  | |  | இல்லாள் முல்லை |  | 279. | கழுமிய காதல் கணவனைப் பழிச்சி இழும் என் சீர்த்தி இல் மலிபு உரைத்தன்று.
 | 
 | உரை | 
		
			|  |  |  | 
					
			
			|  | |  | பகட்டு முல்லை |  | 280. | வயல் மிகு சிறப்பின் வருத்தமும் நோன்மையும் வியல் மனைக் கிழவனைப் பகட்டொடு பொரீஇயன்று.
 | 
 | உரை | 
		
			|  |  |  | 
					
			
			|  | |  | பால் முல்லை |  | 281. | அரிபாய் உண்கண் ஆயிழைப் புணர்ந்தோன் பரிவு அகல் உள்ளமொடு பால் வாழ்த்தின்று.
 | 
 | உரை | 
		
			|  |  |  | 
					
			
			|  | |  | கற்பு முல்லை |  | 282. | பொன் திகழ் சுணங்கின் பூங்கண் அரிவை நன்று அறி கொழுநனை நலம் மிகுத்தன்று.
 | 
 | உரை | 
		
			|  |  |  | 
					
			
			|  | |  | இதுவுமது |  | 283. | மேவரும் கணவன் தணப்பத் தன்வயின் காவல் கூறினும் அத் துறை ஆகும்.
 | 
 | உரை | 
		
			|  |  |  | 
					
			
			|  | |  | இதுவுமது |  | 284. | திருவளர் நல் நகர் அடைந்த கொழுநன் பெருவளம் ஏத்தினும் அத் துறை ஆகும்.
 | 
 | உரை | 
		
			|  |  |  |