ஆண்பால் கூற்று
 
11. கைக்கிளைப் படலம்
ஆண்பால் கூற்று
காட்சி , ஐயம் , துணிவே, உட்கோள்,
பயந்தோர்ப் பழிச்சல் , நலம் பாராட்டல்,
நயப்பு உற்று இரங்கல் , புணரா இரக்கம் ,
வெளிப்பட இரத்தல் ,என இவ் ஒன்பதும்
ஆண்பால் கூற்றுக் கைக்கிளை ஆகும்.
உரை
   
காட்சி
285. சுரும்பு இவர் பூம்பொழில் சுடர்வேல் காளை
கருந்தடங் கண்ணியைக் கண்டு நயந்தன்று.
உரை
   
ஐயம்
286. கல் நவில் தோளான் கண்டபின் அவளை
இன்னள் என்று உணரான் ஐயம் உற்றன்று.
உரை
   
துணிவு
287. மாநிலத்து இயலும் மாதர் ஆம் எனத்
தூமலர்க் கோதையைத் துணிந்து உரைத்தன்று.
உரை
   
உட்கோள்
288. இணர் ஆர் கோதை என் நெஞ்சத்து இருந்தும்
உணராள் என்னை என உட்கொண்டன்று.
உரை
   
பயந்தோர்ப் பழிச்சல்
289. இவள் பயந்து எடுத்தோர் வாழியர் நெடிது என,
அவள் பயந்தோரை ஆனாது புகழ்ந்தன்று.
உரை
   
நலம் பாராட்டல்
290. அழி படர் எவ்வம் கூர , ஆயிழை
பழி தீர்நல் நலம் பாராட்டின்று.
உரை
   
நயப்புஉற்று இரங்கல்
291. கொய் தழை அல்குல் கூட்டம் வேண்டி
எய்துதல் அருமையின் இறப்பப் புகழ்ந்தன்று.
உரை
   
புணரா இரக்கம்
292. உணரா எவ்வம் பெருக ஒளியிழைப்
புணரா இரக்கமொடு புலம்பு தர வைகின்று.
உரை
   
வெளிப்பட இரத்தல்
293. அந்தழை அல்குல் அணி நலம் புணரா
வெந்துயர் பெருக வெளிப்பட இரந்தன்று.
உரை