இருபால் பெருந்திணை
 
இருபால் பெருந்திணை
சீர் செலவு அழுங்கல் , செழு மடல் ஊர்தல்,
தூது இடை ஆடல் , துயர் அவற்கு உரைத்தல்,
கண்டு கை சோர்தல், பருவம் மயங்கல்,
ஆண்பால் கிளவி , பெண்பால் கிளவி,
தேங்கமழ் கூந்தல் தெரிவை வெறியாட்டு,
அரிவைக்கு அவள் துணை பாண் வரவு உரைத்தல்,
பரிபுச் சீறடிப் பரத்தை கூறல்,
விறலி கேட்பத் தோழி கூறல்,
வெள் வளை விறலி தோழிக்கு விளம்பல்,
பரத்தை வாயில் பாங்கி கண்டு உரைத்தல்.
பிறர்மனைத் துயின்றமை விறலி கூறல்,
குற்றிசை, ஏனைக் குறுங்கலி, உளப்பட
ஒத்த பண்பின் ஒன்று தலையிட்ட
ஈர்-எண் கிளவியும் பெருந்திணைப் பால.
உரை
   
செலவு அழுங்கல்
325. நிலவு வேல் நெடுந்தகை நீள் கழை ஆற்றிடைச்
செலவு முன் வலித்துச் செலவு அழுங்கின்று.
உரை
   
மடல் ஊர்தல்
326. ஒன்று அல்ல பல பாடி,
மன்றிடை மடல் ஊர்ந்தன்று,
உரை
   
தூது இடை ஆடல்
327. ஊழி மாலை உறு துயர் நோக்கித்
தோழி நீங்காள் தூதிடை ஆடின்று.
உரை
   
துயர் அவற்கு உரைத்தல்
328. மான்ற மாலை மயில் இயல் வருத்தல்
தோன்றக் கூறித் துயர் அவற்கு உரைத்தன்று.
உரை
   
கண்டு கை சோர்தல்
329. போதார் கூந்தல் பொலம்தோடி அரிவை
காதல் கைம்மிகக் கண்டு கை சோர்ந்தன்று.
உரை
   
பருவம் மயங்கல்
330. உருவ வால் வளை உயங்கத் தோழி
பருவம் மயங்கிப் படர் உழந்தன்று.
உரை
   
331. ஆங்கு அவர் கூறிய பருவம் அன்று எனத்
தேங்கமழ் கோதை தெளிதலும் அதுவே.
உரை
   
ஆண்பால் கிளவி
332. காமுறு காமம் தலை பரிந்து ஏங்கி
ஏம் உற்று இருந்த இறைவன் உரைத்தன்று.
உரை
   
பெண்பால் கிளவி
333. வெள் வளை நெகிழவும் எம் உள்ளாத
கள்வனைக் காணாது இவ் ஊர் எனக் கிளந்தன்று.
உரை
   
வெறியாட்டு
334. தேங்கமழ் கோதை செம்மல் அளி நினைந்து
ஆங்கு அந் நிலைமை யாய் அறியாமை
வேங்கையஞ் சிலம்பற்கு வெறியாடின்று.
உரை
   
பாண் வரவு உரைத்தல்
335. மாண் இழைக்கு வயல் ஊரன்
பாண் வரவு பாங்கி மொழிந்தன்று.
உரை
   
பரத்தை கூறல்
336. தேங்கமழ் சிலம்பன் தார் எமக்கு எளிது எனப்
பாங்கவர் கேட்பப் பரத்தை மொழிந்தன்று.
உரை
   
விறலி கேட்பத் தோழி கூறல்
337. பேணிய பிறர் முயக்கு ஆர் அமுது அவற்கு எனப்
பாணன், விறலிக்குப் பாங்கி மொழிந்தன்று.
உரை
   
விறலி தோழிக்கு விளம்பல்
338. ஆங்கு அவன் மூப்பு அவர்க்கு அருங்களி தரும் எனப்
பாங்கி கேட்ப விறலி பகர்ந்தன்று.
உரை
   
பரத்தை வாயில் பாங்கி கண்டு உரைத்தல்
339. உம் இல் அரிவை உரை மொழி ஒழிய
எம் இல் வலவனும், தேரும் , வரும் எனப்
பரத்தை வாயிற்குப் பாங்கி பகர்ந்தன்று.
உரை
   
பிறர்மனைத் துயின்றமை விறலி கூறல்
340. மற்று அவர் சேரியின் மைந்தன் உறைந்தமை
இற்று என விறலி எடுத்து உரைத்தன்று.
உரை
   
குற்றிசை
341. பொன்தார் அகலம் புல்லிய மகளிர்க்கு
அற்று ஆங்கு ஒழுகாது அறம் கண்மாறின்று.
உரை
   
குறுங்கலி
342. நாறு இருங்கூந்தல் மகளிரை நயப்ப
வேறு படு வேட்கை வீயக் கூறின்று.
உரை