வ - று:
சுக்கியாது, கொங்கியாது, தெள்கியாது, எஃகியாது, வரகியாது,
நாகியாது எனக் கண்டுகொள்க. பிறவும் அன்ன.
இனி ஐகாரக் குறுக்கம் வருமாறு: ஐப்பசி, மைப்புறம், உடைவாள்,
மடையன், குவளை, தவளை, தினை, பனை என முதலும், இடையும்,
கடையும் குறுகியவாறு.
ஒளகாரக்குறுக்கம் வருமாறு: ஒளவை, பௌவம் என முதற்கட்
குறுகிற்று. இடையும் ஈறும் வந்தவழிக் கண்டுகொள்க.
‘ஐஒளவுங் குன்றும்' என்று ஓரிடத்தே கூறினாராயினும்
இறுதி
விளக்காக கொண்டு, ‘தொடர்நெடிற்கீழ் வன்மைமேல் உகரம்' குன்றும்
‘யப்பின்பு அடையவரும் இகரம்' குன்றும், ‘மும்மை இடத்தும் ஐஒளவுங்
குன்றும்' என எங்கும் ஒட்டிக்கொள்க.
என்னை?
புனையுறு செய்யுட் பொருளை யொருவழி
வினைநின்று விளக்கினது விளக்கெனப் படுமே.
முதலிடை கடையென மூவகை யான.
என்பன அணியியல் ஆகலின்,
இனிப் புள்ளியீற்றுமுன் உயிர் தனித்தியலாது,
வந்தேறி முடியுமாறு:
தூண் என நிறுத்தி, அழகிது என உயிர் முதலாகிய வருமொழிகளை
வருவித்து, முன் னொற்றுண்டேற் செம்மையுயி ரேறுஞ் செறிந்து
என்பதனால் தூணழகிது என முடிக்க. நிலமழகிது, வானழகிது என்பன
முதலாயினவும் ஒட்டிக் கண்டுகொள்க.
என்னை?
புள்ளி யீற்றுமுன் னுயிர்தனித் தியலாது
மெய்யொடு சிவணு மவ்வியல் கெடுத்தே
தொல். புணரி. 36
என்பவாகலின்.
மாத்திரை
5. குறினெடில்கள் ஒன்றிரண்டு மூன்றளவு காலாம்
குறுகுமவ் வாய்தம் உயிர்மெய்--பெறுமுயிரே
மெய்யாய்தம் இஉக் குறுக்கமரை மென்மொழியாய்
ஐஒள அளவொன் றரை.
எ - ன்: மேற்கூறிய எழுத்துக்களுக்கு மாத்திரை ஆமாறு
உணர்த்துதல் நுதலிற்று.
|