102நேமி நாதம்

       னும் முன்னிலயினும் தன்மயினும் செல்லா; ஒழிந்த ஒருவன் ஒருத்தி

ஒன்று பல என்னும் பொருள்கண் மற் செல்லும் அத்ண என்றவாறு. என்ன?


      
  பல்லோர் படர்க்கை முன்னிலை தன்மை
        யவ்வயின் மூன்று நிகழுங் காலத்துச்
        செய்யு மென்னுங் கிளவியொடு கொள்ளா 


என்பதாகலின்                                (தொல். வினை. 30)

         அவை வருமாறு: அவன் உண்ணும், அவள் உண்ணும், அஃது
உண்ணும், அவை உண்ணும் எனக் கொள்க. அன்றி அவர் உண்ணும், நீ
உண்ணும், யான் உண்ணும் என்றால், ஆகாது எனக் கொள்க. பிறவும்
அன்ன.                                                  
     (7)

         
  பெயரெச்ச வினையெச்சங்களின் சிறப்பிலக்கணம்

46.     சாற்றும் பெயர்வினை யெச்சங்கள் தாம்அடுக்கித்
       தோற்றல் எதிர்மறுத்துச் சொன்னாலும் - ஏற்றபொருள்
       குன்றாச் சிலசொல் லிடைவந்து கூடியுடன்
       நின்றாதல் மெய்ந்நூல் நெறி.


      
எ - ன்: பெயரெச்சத்திற்கும் வினையெச்சத்திற்கும் எய்துவதோர்
இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று.

    
  இ - ள்: பெயரெச்சமும் வினையெச்சமும் ஒரு சொல்லின்பின்
முற்றாதே பலசொல் உடன் அடுக்கி வந்து முற்றவும் பெறும்; அவை
இரண்டும் எதிர் மறுத்துச் சொன்னாலும் பெயரெச்சமும் வினையெச்சமுமாந்
தன்மை திரியாது தமக்கேற்ற சொல் இடை வந்து நிற்க முடியவும் பெறும்

எ-று.


       ‘கூடியுட னின்றாதல்' என்பதனால் பொருத்தமுடைய சொல்
இடைநிற்கப் பெறும்; அல்லாதன பெறா எனக் கொள்க.


அவை வருமாறு:
        
 மூவா முதலா வுலகமொரு மூன்று மேத்தத்
         தாவாத வின்பந் தலையாயது தன்னி னெய்தி
         யோவாது நின்றகுணத் தொண்ணிதிச் செல்வ னென்ப
         தேவாதி தேவ னவன்சேவடி சேர்து மன்றே. 

                            
(சீவக சிந்தாமணி, கடவுள் வாழ்த்து)
என்றும்,