104நேமி நாதம்

     வழுதிமேற் செல்லாமையின் நல்லிளங் கோசரை இடை நிறுவற்க.
பிறவும் வந்தவழிக் கண்டுகொள்க.                             
(8)
                            

              உயர்திணைக் குறிப்புவினைமுற்றுக்கள்

47.    நெடியன் உடையன் நிலத்தன் இளைஞன்
      கடியன் மகத்தன் கரியன் - தொடியனென
      ஒண்ணுதலாய் மற்றையவும் எண்ணி உயர்திணையின்
      நண்ணும் வினைக்குறிப்பு நாட்டு.

   
  எ - ன்:  உயர்திணை வினைக்குறிப்பாமாறு உணர்த்துதல் நுதலிற்று.

     
இ - ள்: அவை ஆண்பாலில் ஒட்டினபடியே பெண்பாலினும்,
பன்மைப் பாலினும் செலுத்த உயர்திணை வினைக்குறிப்பாம் எ-று.

      அவை வருமாறு: நெடியன், நெடியள், நெடியர், உடையன், உடையள்,
உடையர்;  நிலத்தன், நிலத்தள், நிலத்தர்;  இளையன், இளையள், இளையர்;
கடியன், கடியள், கடியர்; மகத்தன், மகத்தள், மகத்தர்; கரியன், கரியள்,
கரியர்; தொடியன், தொடியள், தொடியர் என்பன உயர்திணை
வினைக்குறிப்பு. பிறவும் அன்ன.                              
(9)
                   
              அஃறிணைக் குறிப்புவினைமுற்றுக்கள்

48.     கரிதரிது தீது கடிது நெடிது
       பெரிதுடைத்து வெய்து பிறிது - பரிதென்ப
       ஆயிழாய் பன்மையினுஞ் செல்ல அஃறிணையின்
       மேய வினைக்குறிப்பா மி்க்கு.

     
 எ - ன்: அஃறிணை வினைக்குறிப்பாமாறு உணர்த்துதல் நுதலிற்று.

      
இ - ள்: இச் சொல்லப்பட்டவை அஃறிணை வினைக்குறிப்பாம்
எ-று.
       அவை வருமாறு:  கரிது, கரிய; அரிது, அரிய; தீது, தீய; கடிது,
கடிய; நெடிது, நெடிய; பெரிது, பெரிய; உடைத்து, உடைய; வெய்து, வெய்ய;
பிறிது, பிற; இவையும் பிறவும் அஃறிணை வினைக்குறிப்பாம்.      
(10)