சொல் அதிகாரம்113

அவை வருமாறு: கொள்ளெனக் கொண்டான் என்பது வினை. ஊரெனப்படுவது உறையூர் என்பது பெயர். நிலனென நீரென என்பது எண். ஒல்லென ஒலித்தல் என்பது இசை. விண்ணென விசைத்தல் என்பது குறிப்பு. வெள்ளென விளர்த்தல் என்பது பண்பு. இவை என என்னும் இடைச்சொல். என்று என்பதனையும் இவ்வாறே எங்கும் ஒட்டிக்கொள்க. ‘வல்ல மன்ற' என்பது தேற்றத்தின்கண் வந்தது. ‘முரசுகெழு தாயத் தரசே தஞ்சம்'1 என்பது எளிமைக்கண் வந்தது.

           
 ஈனோரே தஞ்ச மிருபிறப்பி னோர்வெகுளின்
           வானோர்க்கும் வாழ்த லரிது 

என்பது மது.

            
 மன்றவென் கிளவி தேற்றஞ் செய்யும் 
             தஞ்சக் கிளவி யெண்மைப் பொருட்டே 

                                        
 (தொல். இடை. 17, 18)

            
 உயிரே மெய்யே யுயிர்மெய் யென்றா
            குறிலே நெடிலே யளபெடை யென்றா
            வன்மை மென்மை யிடைமை யென்றா
            சார்பிற் றோன்றுந் தன்மைய வென்றா 
   

                                                                                                                     (யாப். விருத். 2)


என என்றா வந்தவாறு.


             
 பின்சா ரயல்புடை தேவகை யெனா
              முன்னிடை கடைதலை வலமிட மெனா 


என எனா வந்தவாறு (4)

    
ஓகார இடைச்சொல்லும் இவ்வியலுக்குப் புறனடையும்

 
55.    சிறப்பும் வினாவுந் தெரிநிலையு மெண்ணும்
        உறப்பின் எதிர்மறையி னோடும் - வெறுத்த
        ஒழியிசையும் ஈற்றசையும் ஓகாரஞ் சொல்லா
        ஒழிபொருளுஞ் சார்த்தி உணர்.


      
 எ - ன்: ஓகார விடைச்சொல்லா மாறும், இவ்வோத்துக்குப் புறனடை ஆமாறும் உணர்த்துதல் நுதலிற்று.
-------------------------
1. புறம். 73.