116நேமி நாதம்

        வரலாறு: ஊர்கம்பலை யுடைத்து; தள்ளாத சும்மை மிகும்; மன்றார்
கலிக்கச்சி்;  அழுங்கன் மூதூர்; ஆர்ப்புடை மூதூர் இவை அரவப் பொருள்.

      
  ‘நயந்து நாம்விட்ட நன்மொழி நம்பி
        மேவுவந் தொழுகினர்'

என இவை நசைப்பொருள்; 

        வம்ப வடுகர், வம்ப நாரை என்பன நிலையின்மை;

         
‘பசப்பித்துச் சென்றா ருடையையோ வன்ன
         நிறத்தையாற் பீர மலர்'

இது பசலைப்பொருள்.

        
‘மருப்பு நொடைவில் வலித்து மழகளி றெய்ய'

என்பது நொடை விலையாயிற்று.

         ‘வாளார் மதிமுகம்' என்பது ஒளியாயிற்று.

         ‘என்ப' என்று மிகுத்துச்சொல்லியவதனால், பேம், நாம்,
          உரும், உட்கு என்பன அச்சப்பொருள்; என்னை?

         
‘பேநா முருமென் வருஉங் கிளவி
         யாமுறை மூன்று மச்சப் பொருள'  
     (தொல். உரி. 69)

என்றாராகலின். அவை வருமாறு:

         
‘பேஎ நாறுந் தாழ்நீர்ப் பனிச்சுனை'
என்றும்,
          ‘நாமவேற் றடக்கை வேந்து'
என்றும், 
          ‘தீத்தும் முருமு வேலோன்'
என்றும்,
          ‘உட்கும் புனலங் கருதி'

என்றும் வருவன. இவை அச்சப்பொருள. பிறவும் அன்ன.            (2)

                    
  இதுவும் அது

58.   விரைவு விளக்க மிகுதி சிறப்பு
     வரைவு புதுமையுடன் கூர்மை - புரைதீர்
     கரிப்பையங் காப்பச்சந் தோற்றமீ ராறும்
     தெரிக்கிற் கடிச்சொற் றிறம்.