தொகைச்சொற்கள்
பொருள்படும் வகை
64. முன்மொழியும் பின்மொழியு மூண்ட விருமொழியும்
அன்மொழியும் என்றிவற்றில் ஆம்பொருள்கள் -
முன்மொழிதான்
காலம் இடத்தாற் கருத்தொடுஞ் சேர்த்தறிதல்
மேலையோர் கண்ட விதி.
எ - ன்: சொல்லப்பட்ட தொகைச் சொற்கள்
பொருள்படுமாறு
உணர்த்துதல் நுதலிற்று.
இ - ள்:
இரண்டு சொற்கள் கூடின தொகைக்கண் முன்மொழியிலே
பொருள் நிற்பனவும், பின்மொழியிலே பொருள் நிற்பனவும், இருமொழியினும்
பொருள் நிற்பனவும், இருமொழியினும் பொருள் அன்றி வேறொரு
மொழியிலே பொருள் நிற்பனவும் ஆம். முன்மொழிதான் காலமுன்னும்
இடமுன்னும் என இரண்டாம் எ-று.
அவை வருமாறு: அரைமா என்புழி, முன்மொழியிலே பொருள்
நின்றது; இஃது இடமுன். தேங்காய் என்புழிப் பின்மொழியிலே பொருள்
நின்றது; இது காலமுன். இராப்பகல் என்புழி இருமொழியினும் பொருள்
நின்றது. காராடை என்புழி வேறொரு மொழியிலே பொருள் நின்றது. பிறவும்
அன்ன. என்னை?
அவை தாம்,
முன்மொழி நிலையலும் பின்மொழி நிலையலு
மிருமொழி மேலு மொருங்குட னிலையலு
மம்மொழி நிலையா தன்மொழி நிலையலு
மந்நான் கென்ப பொருள்நிலை மரபே.
(தொல். எச்ச. 23)
என்றாராகலின்.
(4)
------------------------
மிகுத்துச் சொல்லிய வதனால், செய்யும் என்னும் முற்றுச்
சொல்லாயின்
அதன் ஈற்று மிசை உகரம் மெய்யொடும், மெய்
ஒழித்தும் கெடும் என்று
பொருள் கூறுதலே ஏற்புடையதாகும் என்க.
‘அரிவாள்' என்பது செய்யும்
என்னும் பெயர் எச்சத்தின் ஈற்று மிசை
உகரம் தான் ஊர்ந்த மெய்யுடனும்
மற்று மகர மெய்யுடனும் கெடுதற்கு
உதாரணமாம். இதனை வினைத்தொகை
எனக் கோடலே நேரிதாம்
என்க.
|