சொலற்பால வல்லாத சொல்லுதலுங் குற்றங்
கொலைப்பாலுங் குற்றமே யாம்
இது புனல்யாற்றுப் பொருள்கோள்.
உண்ணாமை யுள்ள துயிர்நிலை யூனுண்ண
வண்ணாத்தல் செய்யா தளறு.
இது தாப்பிசைப் பொருள்கோள்.
தெங்கங்காய் போலத் திரண்டுருண்ட பைங்கூந்தல்
வெண்கோழி முட்டை யுடைத்தன்ன
மாமேனி
அஞ்சனத் தன்ன பசலை தணிவாமே
வங்கத்துச் சென்றார் வரின்.
இது மொழிமாற்றுப் பொருள்கோள்.
மனைக்கு விளக்கு மடவாண் மடவாள்
தனக்குத் தகைசால்
புதல்வர் - மனக்கினிய
காதற் புதல்வர்க்குக்
கல்வியே கல்விக்கே
ஓதிற் புகழ்சா லுணர்வு
இது விளக்கென்னு மதனை எங்கும் ஒட்டுதலால், அளைமறி பாப்புப்
பொருள் கோள். இவையிற்றை விரித்துக் கண்டு கொள்க.
(8)
சொற்பொருள் வகை
69, சொல்லாற் றெரிதல் குறிப்பினாற் றோன்றுதலென்
றெல்லாப் பொருளு மிரண்டாகு - மெல்லியலாய்
தொன்மொழியு மந்திரமுஞ் சொற்பொருள் தோன்றுதலின்
இன்மையும் உண்மையுமாம் ஈங்கு
எ - ன்:
இதுவும் ஒரு பொருள் தெரியு முறைமை உணர்த்துதல்
நுதலிற்று.
இ - ள்:
ஒரு சொல்லைச் சொன்ன மாத்திரத்திலே பொருள்
தோன்றியும், குறிப்பினான் அன்றிப் பொருள்தெரியாதனவுமாம்; முது
சொல்லும், மந்திரமும் பொருள் உள்ளனவும், இல்லனவுமாய் இருக்கும் எ-று.
அவை வருமாறு: இரும்பு, கரும்பு, கடல், திடல் என்பன
சொன்ன
மாத்திரத்திலே பொருள் தெரிந்தன. இனிக், கற்கறித்து நன்கட்டாய் எனவும்,
உண்டற்குக் குறைபாடுடையான், அழகிதாக உண்டேன் எனவும் 1 முதலாயின
குறிப்பினாற் பொருள் தெரிந்தன.
-------------------------
1. ஈண்டு ‘வருகின்ற இவை' என்னும் சொற்கள் இருத்தல் வேண்டும்.
|