சொல் அதிகாரம்131

‘ஆற்றிற் கெட்ட கழுதைப் பாக்கம் ஊரிலிருந்த குயவனுக் குப்பாம்' என்றால்,
இதனிற் பொருளில்லை. என்னை பொரு ளில்லாதவாறு எனின்,
பொருள்தொடர்மொழி யாயினதுணை யல்லது, பொருள் திரண்ட தின்மையிற்,
பொருளில் சொல்லாயிற்று. இனிக் கெட்டார்க்கு நட்டாரில்லை என்றும்,
செல்வர்க்குப் புல்லாரில்லை என்றும் இவை பொருள் பெற வந்தன. ‘திரிக
திரிக திரிக சுவாகா' என்பதனிற் பொருளில்லை. ‘கன்று கொண்டு கறவையும்
வத்திக்க சுவாகா' என்றது பொருள் உண்டு. பிறவும் அன்ன.          
(9)

        
காலத்திலும் எண்ணிலும் வரும் வழுவமைதியும்
                     வழுவும்

70.    முந்துரைத்த காலங்கண் மூன்று மயங்கிடினும்
      வந்தொருமை பன்மை மயங்கினும் - பைந்தொடியாய்
      சான்றோர் வழக்கினையும் செய்யுளையும் சார்த்தியலின்
      ஆன்ற மரபாம் அது.

     
எ - ன்: காலங்களும், ஒருமை பன்மையும் வழுவமைத்துக்
கொள்வனவும் உளவென்பது உணர்த்துதல் நுதலிற்று.

     
இ - ள்: கால மூன்றும் தம்முண் மயங்கி வரினும், ஒருமை பன்மை
மயங்கி வரினும், சான்றோர் வழக்கும் சான்றோர் செய்யுளும் தழுவுஞ்
சொல்லாயிற் பெறும்;  அல்லாதன வழு என்று அறிக எ-று.

      அவற்றுட் சில வருமாறு: சோறு வேவா நிற்ப, அஃது உண்டு போதற்

பொருட்டாக இருந்தோன் ஒருவனைப் புறத்து நின்றான் ஒருவன் இருவரும்
போகவேண்டுங் குறையுடைமையின், ‘இன்னு முண்டிலையோ?' என்றால்,
‘உண்டேன் உண்டேன்' என்னும்; உண்ணா நின்றானும் உண்டேன்
உண்டேன் என்னும்; இவை விரைவின் எதிர்காலமும், நிகழ்காலமும்
இறந்தகாலமாயின.

       இக்காடு போகிற் கூறை கோட்படும் என்பதனை இக்காடு போகிற்
கூறை கோட்பட்டான் என்றால், வராக் காலத்தை இறந்த காலத்திற்
சொன்னவாறு.

        ‘யாம் பண்டு வில்லெய்தது இக்கல்லூரி என்பதனை, யாம் பண்டு
வில்லெய்யும் இக்கல்லூரி என்பதும் அமையும்.

        ‘ஒக்கற் றலைவ ஒருவீர்' எனவும், யாம் எங்களூர் புகுவேன், நீ
யுங்களூர் புகுவீர் எனவும், ‘என்னீ ரறியாதீர் போல விவைகூறின் நின்னீர
வல்ல நெடுந்தகாய்' எனவும், ‘தச்சனைக் கூவி', ‘எந்திர