என்னை?
மெய்யி னியக்க மகரமொடு சிவணும் 1
தொல். மொழி ம. 13.
என்ப ஆகலின். மற்றுஞ் சில உயிரை ஏற்றி, உச்சரிக்கவும் ஆமோ? எனின்,
ஆகாது, அவை கொம்பும், காலும், கட்டும், வீச்சும் வேறுபடுதலின், வடிவு
வேறுபடுமாதலான் என்க.
(7)
இறுதி நிலை
8. உயிரின்கண் ஒன்பா னுடன்மென்மை யின்மூன்
றயர்வில் இடையினங்கள் ஆறு நயனுணர்ந்து
நன்மொழிகட் கீற்றெழுத்தாம் என்றுரைப்பர் ஞாலத்துச்
சொன்முடிவு கண்டோர் துணிந்து.
எ - ன்:
மொழிக்கு ஈறாம் எழுத்துக்களது பெயர் வேறுபாடு தெரிந்
துணர்த்துதல் நுதலிற்று.
இ - ள்:
அ, ஆ, இ, ஈ, உ, ஊ, ஏ, ஐ, ஓ என்னும் உயிரொன்பதும்,2
ணகர, னகர, மகர மென்னும் மெல்
--------------------------
1. ‘நிலையல்' எனவும் பாடம்.
2. ஆசிரியர் தொல்காப்பியனார் பன்னிரண்டு உயிரும்
ஈற்றிலே வரும் என்றார் அதனை,
‘உயிர்ஒள எஞ்சிய இறுதி ஆகும்'
தொல். மொழிமரபு. 36.
எனவும்,
‘கவயோ டியையின் ஒளவும் ஆகும்'
எனவும் கூறியவற்றான் அறிக.
நன்னூலாரும், இலக்கணவிளக்க நூலாசிரியரும் அங்ஙனமே
கூறினர். வீரசோழிய நூலாசிரியர் ‘ஈரைந்துயிர் ஈறாம்' என்றார்.
அதன் உரையாசிரியர் அவ்வீரைந்துயிர் எகர ஒகரம் ஒழிந்தன என்று
கூறினார். இந்நூலின் உரையாசிரியர், நன்மொழி என்று மிகுத்துச்
சொல்லியவதனால் ஒகரம் ஈறாம் இடமும் உண்டு்; அது ‘நொ' எனக்
காண்க என்றார், ஆசிரியர் தொல்காப்பியனார், பதினொரு மெய்கள்
ஈறாம் என்றார். அதனை,
ஞணநமன யரல வழள என்னும்
அப்பதி னொற்றே புள்ளி இறுதி தொல். மொழிமரபு. 45.
என்றதனால் அறிக.
நன்னூலாசிரியரும் இலக்கண விளக்க நூலாசிரியரும்
அங்ஙனமே கூறினர். வீரசோழிய நூலாசிரியர்,
இந்நூலாசிரியரைப்போலவே மெல்லினத்துள் ணகர னகர மகரங்கள்
ஈற்றில் வரும் என்றார். ஆயினும், இடையினத்துள் வகரம் ஒழிந்த
ஐந்துமே ஈற்றில் வரும் என்றார். இந்நூலாசிரியரும் வீரசோழிய
ஆசிரியரும் குற்றியலுகரம் ஈறாதலைக் கூறிற்றிலராயினும்
குற்றியலுகரம் கொண்டனராகலின் அஃது ஈறாதலையும் உடன்பட்டார்
ஆவர்.
|