லினம் மூன்றும், ய, ர, ல, வ, ழ, ள என்னும் இடையின மாறும்
மொழிக்கு ஈற்றெழுத்தாம் எ - று.
வ - று:
விள, பலா, கிளி, தீ, வேந்து, பூ, சே, பனை, கோ என்பன
உயிரீறு; இவற்றை உயிர்மெய்யீறு என்னாது உயிரீறு என்றது என்னையோ?
வெனின், மொழிகளின் ஈற்றிலே நின்ற உயிர்மெய்யை உயிரீறு என்னலாம்;
என்னை?
மெய்யின் வழிய துயிர்தோன்று நிலையே.
(தொல். நூன். 18)
என்றார் ஆகலின்.
உயிர்மெய் யீறும் உயிரீ றியற்றே.
(தொல். புணரி. 4)
என்பதனாற் பிரித்தால் உடல்முன் உயிர்பின்ஆம் ஆதலால் எனக் கொள்க.
அன்றியும், வாளும் கூடும் இருப்பின் வாளைக் கொடுவா என்னும்
அத்துணை அல்லது கூட்டைக் கொடுவா என்பது இல்லை ஆதலான்
இங்ஙனம் சொல்லப்பட்டது.
வ - று:
மண், மரம், பொன், மெய், தார், மால், தெவ், புகழ், வாள்
எனவும் கண்டுகொள்க. ‘நன்மொழி' என்று மிகுத்துச் சொல்லியவதனால்
ஒகரம் ஈறாம் இடமும் உண்டு; அது நொ எனக் காண்க.
(8)
எழுத்துப் போலியும், உருவமும்
9. ஆதியுயிர் வவ்வியையின் ஒளவாம் அஃதன்றி
நீதியினால் யவ்வியையின் ஐயாகும் - ஏதமிலா
எஒமெய் புள்ளிபெறும் என்ப சஞயமுன்
அஐயாம் ஆதி யிடை.
எ - ன்: சில எழுத்துப் போலியும், சில எழுத்து
வடிவு
வேற்றுமையும் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.
இ - ள்:
அகரமும் வகரவொற்றும் கூடி ஒளகாரத்தின் பயத்த
ஆகலும், அகரமும் யகரவொற்றும் கூடி ஐகாரத்தின் பயத்த ஆகலும், எகர
ஒகரங்கள் மெய்கள் புள்ளி பெற்று நிற்றலும், சகர ஞகர யகரங்களின்
முன்னாய் மொழிக்கு முதலாய் நின்ற அகரமும் இடை நின்ற அகரமும்
ஐகாரம் ஆகலும் ஆம் எ-று.
---------------------
1. இச்சூத்திரத்து ‘எ ஒ மெய் புள்ளிபெறும்' என்றது எழுத்துக்களின்
உருவங்கூறியதாம், மற்றவை
எழுத்துப் போலி கூறியனவாம் என்க
|