18நேமி நாதம்

     வ - று: அவ்வை, ஒளவை, எனவும், அய்யர், ஐயர் எனவும் வரும்,

     எரி, ஒதி, மென்மை, கொங்கு என எகர ஒகரங்களும் மெய்களும்
புள்ளி பெற்றவாறு.

     தச்சு தைச்சு, மஞ்சு மைஞ்சு, தய்யல் தையல் என மொழிக்கு முதலாய்

அகரம் ஐகாரம் ஒத்தவாறு.

     அரசு அரைசு, இலஞ்சி இலைஞ்சி, அரயர் அரையர் என
மொழியிடையின் நின்ற அகரம் ஐகாரம் ஒத்தவாறு. இவற்றுள், ஒன்றும்
சிறந்ததில்லை. என்னை?


       
   அ ஐ முதலிடை யொக்கு மொரோவழி. 


என்பவாகலின்.                                                (9)                                                


வடமொழி தமிழில் ஆகும் வகை


10.  அகரத்திற் காவும் இகரத்திற் கையும்
    உகரத்திற் கௌவும் இருவிற் - ககல்வரிய
    ஆருமாம் ஏயாம் இகரத்திற் கோவாகிச்
    சேருமுக ரத்தின் றிறம்.


   
எ - ன்:  ஒருசார் வடமொழி முடிபு உணர்த்துதல் நுதலிற்று.

   
இ-ள்:  அகரம் ஆகாரமாயும், இகரம் ஐகாரமாயும், உகரம்
ஒளகாரமாயும், இரு என்பது ஆராயும் வரும் ஒரு சொல்லிடத்து; இனி இரு

சொல்லிடத்து இகரம் ஏகாரமாயும் உகரம் ஓகாரமாயும் வரும் எ - று.

   
வ - று: அருகன் என நிறுத்தி இவனைத் தெய்வம் ஆக உடையான்
யாவன்? எனக் கருதியவிடத்து அகரத்தை ஆகாரமாக்கி, ‘ஒற்று மிகும்' 1
என்பதனாற் ககரவொன்றின் பின்னே தகரவொற்றை மிகுத்து, ‘சுட்டு மிகும்' 2
என்பதனால் அகரச்சுட்டை மிகுத்து, முன்னொற்றுண்டேற் செம்மையுயி

ரேறுஞ் செறிந்து' 3 என்பதனால் ஒற்றிலே உயிரை ஏற்றி ஆருகதன் என
முடிக்க.
----------------------
1, இந்நூலின் இவ்வதிகாரம், சூ. 24
2. இந்நூலின் இவ்வதிகாரம், சூ. 22
3, இந்நூலின் இவ்வதிகாரம், சூ.  4