தசரதன் மகன்
தாசரதி என்புழி நிலைமொழி ஈற்றில் நின்ற
அன்என்னும் பதத்தைக் கெடுத்து, இகரச்சுட்டை மிகுத்துத், தகரவொற்றிலே
உயிரை ஏற்றி, முதல் நின்ற தகர அகரத்தை ஆகாரமாக்கித் தாசரதி என
முடிக்க.
சிவ என நிறுத்தி, இவனைத் தெய்வமாக உடையான் யாவன்?
எனக்
கருதிய பொழுது, இகரத்தை ஐகாரமாக்கிச் சைவன் என முடிக்க.
புத்தன் என நிறுத்தி, இவனைத் தெய்வமாக உடையான் யாவன்?
எனக் கருதிய போது, உகரத்தை ஒளகாரம் ஆக்கிப் பௌத்தன் என
முடிக்க.
இருடிகள் என நிறுத்தி, இவர்களாற் செய்யப்பட்டது யாது?
எனக்
கருதிய பொழுது இரு வென்பதனை ஆர் ஆக்கி, இகரச்சுட்டை மிகுத்து,
ரகர ஒற்றிலே உயிரையேற்றி, ‘கடைக்குறைத்தல்' என்பதனாலும் ‘ஓரோர்
மறுவில் பதங்கெட்டு வரும்' 1 என்பதனாலும் இகள் என்னும் பதத்தைக்
கெடுத்து, அம் என்னும் பதத்தை மிகுத்து ஆரிடம் என முடிக்க.
இருசொல்லிடத்து 2 நரன் என நிறுத்தி, இந்திரன் என வருவித்து,
நிலைமொழி இறுதியில் நின்ற அன் என்னும் பதத்தைக் கெடுத்து, 'ஏயா
மிகரத்திற்கு' 3 என்பதனான் இகரத்தை ஏகாரமாக்கி, ரகரவொற்றின்மேல்
உயிரை ஏற்றி நரேந்திரன் என முடிக்க. ‘ஏயா மிகரத்திற்கு' என்று
சிறப்பித்தவதனான் அமரேசன் என்னும் ஈகார பதமும் இவ்வாறே முடிக்க.
குலம் என நிறுத்தி, உத்துங்கன் என வருவித்து, நிலைமொழி
ஈற்றில் நின்ற அம் என்னும் பதத்தைக் கெடுத்து, உகரத்தை ஓகாரமாக்கி,
லகர வொற்றின்மேல் உயிரை ஏற்றிக் குலோத்துங்கன் என முடிக்க. கூப+உதகம்=கூபோதகம்
என்பதும் அது. பிறவும் அன்ன.
சில வடமொழிகளின் முடிபு
11. நேர்ந்த
மொழிப்பொருளை நீக்க வருநகரஞ்
சார்ந்த துடலாயிற் றன்னுடல்போஞ் - சார்ந்ததுதான்
----------------------
1. இந்நூலின் இவ்வதிகாரம். சூ. 16
2. ஆருகதன், தாசரதி, ஆரிடம் என்பன ஒவ்வொரு மொழிகளாகவே
நிற்றலான, அவற்றை ஒரு மொழி எனக்கொண்டு, நரேந்திரன் என்பது
முதலியவை ஒரு பொருள் குறித்து நின்றன வெனினும் இருசொற்கள்
கூடி நிற்றலான், அவற்றை இருசொல் என்றார் என்றுணர்க.
3, இந்நூல் இவ்வதிகாரம், சூ. 10.
|