சொல் அதிகாரம்71

ஏர்ப்பின் சென்றான், காட்டுச்சார் ஓடுங் களிறு, சான்றோரயல் இருந்தான்,
தேர்ப்புடை வந்தான் (தேவகை 1 என்பது திசைக் கூற்று) தேர்முன்
சென்றான், வேந்தரிடை இருந்தான், கோயிற் கடை சென்றான், தந்தைதலைச்
சென்றான், கைவலத்துள்ளது வேல், பூசலிடத்து வென்றான் இவை இடத்தில்
வந்தன.

      மாரியுள் வந்தான் என்பது காலம்பற்றி வந்தது.

     வாசினையில் வந்தான் என்பது வினையிடம்பற்றி வந்தது. பிறவும்
அன்ன. என்னை?

     
 ஏழாகுவதே,
      கண்ணெனப் பெரிய வேற்றுமைக் கிளவி
      வினைசெய் யிடத்தி னிலத்திற் காலத்தி
      னனைவகைக் குறிப்பிற் றோன்று மதுவே  
(தொல். வேற். 20)


    
 கண்கால் பறமக முள்ளுழை கீழ்மேல்
     பின்சா ரயல்புடை தேவகை யெனாஅ
     முன்னிடை கடைதலை வலமிட மெனாஅ
     அன்ன பிறவு மதன்பால வென்மனார்      
(தொல். வேற். 21)


என்றாராகலின்.
     

வேற்றுமை மரபு முற்றும்


மூன்றாவது உருபு மயங்கியல்

 

வேற்றுமைகளின் சிறப்பிலக்கணம்



21. வேற்றுமை ஒன்றன் உரிமைக்கண் வேறொன்று
   தோற்றல் உருபுதொக வருதல் - ஏற்றபொருள்
   மாறினும் தானிற்றல் வந்தொன்றின் ஒன்றேற்றல்
   தேறவரு மெய்ந்நூற் றெளிவு.
     

          எ-சூ: இவ்வோத்து என்ன பெயர்த்தோ? எனின், உருபு மயங்கியல்
என்னும் பெயர்த்து. இவ்வோத்தினுள், இத்தலைச் சூத்திரம் என்னுதலிற்றோ
வெனின், அவ்வேற்றுமைகட்கு எய்தியதோர் இலக்கணம் உணர்த்துதல்
நுதலிற்று.
-------------------------
      1. தேவகை என்பதற்கு ஈண்டு உதாரணம் காட்டப்படவில்லை,
இதற்குச் சேனாவரையர், ‘வடபால வேங்கடம்' ‘தென்பால் குமரி'

என்பவற்றையும், நச்சினார்க்கினியர் ‘வடக்கண் வேங்கடம்'
என்பதனையும் உதாரணமாகக் காட்டினார். இதற்கு அவற்றை
உதாரணமாகக் கொள்க.