28நேமி நாதம்

     சாலியன், கோலிகன், தேன் என நிறுத்தி ஏற்ற சொற்களை வருவித்துச்
சாலியத்தறி, கோலிகத்தறி, தேத்தடம் என இறுதி னகர வொற்று
வருமெழுத்தாம் என்பதனான் முடிக்க.


     முக்குடை, முச்சந்தி, முத்தொகை, முப்புவனம் என்பன எல்லாம்
செய்கை செய்து நிறுத்தி முடிக்க. செய்கையாவது:   மூன்று என நிறுத்திக்,
குடை என வருவித்து, ‘ஆங்குயிர்மெய் போம்' என்பதனான் றகர
உயிர்மெய்யை அழித்து ‘திருந்தும் விகாரங்கடேர்ந்தாறு மூன்றும்,
பொருந்துமிடங் கண்டு புகல்' 1 என்பதனான் மூன்றென்பதனைக்,
‘குறுக்கும்வழிக் குறுக்கல்,2 என்னும் விகாரத்தான் முன் என நிறுத்தி, ‘இறுதி
வருமெழுத்தாம்' என்பதனான் னகரத்தை வருமெழுத்தின் ஒற்றாய்த் திரித்து
முக்குடை எனக் காண்டலாம்.

       ஈறு அர் ஆம், என்பதனாற் சாலியன், கோலிகன் என நிறுத்திச்
சாலியர் குளம், கோலிகர் குளம் என முடிக்க. இது னகரம் ரகரமாய்த்
திரிந்தது.

       இனி ‘ஓரோர் மறுவில் பதங்கெட்டுவரும்' என்பதனால் சோழன் என
நிறுத்தி, நாடு என வருவித்து, அன் என்னும் பதத்தைக் கெடுத்துச்,
சோழநாடு என முடிக்க. பாண்டியன் என நிறுத்தி, நாடு என வருவித்து,
அன் என்னும் பதத்தைக் கெடுத்து, ‘ஒற்றுப்போம்'3 என்பதனான்
யகரவொற்றை அழித்துப் பாண்டி நாடு என முடிக்க. பல்லவத்தின் சந்தம்4
என்புழிப் பல்லவம் என நிறுத்திச்,  சந்தம் என வருவித்து, அத்தும்,
இன்னும் என்னும் இரண்டிடைச் சொற்களை நிறுத்தி, நிலைமொழி
ஈற்றினின்ற அம்மென்னும் பதத்தைக் கெடுத்து, ‘முன் னொற்றுண்டேற்,
செம்மையுயி ரேறுஞ் செறிந்து'5 என்பதனான் வகர ஒற்றின்மேல் அகர
உயிரை ஏற்றிப் பல்லவத்தின் சந்தம் என முடிக்க.                
 (16)

ளணலன மெய்களின் முடிபு


17.      வன்மை வரினே ளணலன மாண்டறவாம்
        மென்மை வரினே ளலணனவாம் -- தந்நக்கள்
        முன்பின்னாந் தப்பி னணவியல்பாத் தட்டறவா
        மொன்றழிந்து போதலு முண்டு.

------------------------
இந் நூலின் இவ்வதிகாரம். சூ. 19.
தொல். சொல். எச்சவியல். சூ. 7.
இந்நூலின் இவ்வதிகாரம். சூ. 22.
இத்தொடர் யாப்பருங்கலக் காரிகையின் முதற் சூத்திரத்தில்

வந்துள்ளது.
இந் நூலின் இவ்வதிகாரம். சூ. 4.