30நேமி நாதம்

      இனித் ‘தப்பி னணவியல்பாத் தட்டறவாம்' என்பது மண், பொன் என
நிறுத்தித் தண்ணிதெனத் தகர முதலாகிய சொற்களை வருவித்து
மண்டண்ணிது, பொன்றண்ணிது என முடிக்க.

      இனி ‘ஒன்றழிந்து போதலுமுண்டு' என்பதனான் வாள், வேல் என
நிறுத்தி வருமொழியினின்ற தகாரத்தை டகார றகாரமாக்கி இவ்
விலக்கணத்தால் நிலைமொழி ஒற்றை அழித்து வாடோய்ந்தது, வேறோய்ந்தது
என முடிக்க.

       ‘ஒன்றழிந்து போதலுமுண்டு' என்ற உம்மையால் அழியாமையுமுண்டு;
அது வாட்டடங்கண், கோற்றொடி என வரும்.

       தொடர்மொழிப் பின்னும் நெடிற்பின்னும் வந்தால் ஒன்றழிகை
னகாரத்துக்கும் ணகாரத்துக்கும் ஒக்குமெனவறிக. வரலாறு: தூணன்று,
அரணன்று, சாணன்று, மானன்று, வானன்று, அகனன்று என வரும்.

       ‘உண்டு' என்ற மிகையால், தனிக் குற் றெழுத்தின்கீழ் ளகார
லகாரங்கள் நிற்க ஒன்றழியில், இடையே ஆய்தமும் புகுந்து முடியும்; அவை
ஆய்தகுறுக்கம் என உணர்க. வரலாறு: முள், கல் என நிறுத்தித் தீது என
வருவித்து முஃடீது, கஃறீது எனவும்; அல், பல் என நிறுத்தித், திணை,
தொடை என வருவித்து, அஃறிணை, பஃறொடை எனவும் முடிக்க. பிறவும்
அன்ன.                                                    
(17)

                     
மகரவீற்று முடிவு

18.     மகரந்தான் வன்மைவரின் வர்க்கத்தொற் றாகும்
       புகரிலா மென்மைவரிற் பொன்று - நிகரில்
       வகரம்வந் தாற்குறுகும் வவ்வழிந்து மவ்வா
       மகரந் தவயவாம் வந்து.


      
எ - ன்: மகரவீற்று நிலைமொழி, முடிபு பெறுமாறுணர்த்துதல்

நுதலிற்று.

      
 இ - ள்: நிலைமொழி யீற்றினின்ற மகரம், வருமொழிக்கு முதலாக
வல்லெழுத்து வந்தால் வந்த வல்லெழுத்தின் வர்க்கத்தொற்றாய்த் திரியும்;
மெல்லெழுத்து வந்தால் மகரம் அழிந்து முடியும்; நிலைமொழி யீற்றினின்ற
மகரம் வருமொழிக்கு முதலாக வகரம் வரின் மகரங் கான்மாத்திரையாய்க
குறுகும்; நிலைமொழி இறுதியினின்ற வகரந்திரிந்து மகரமாகவும் பெறும்;
பண்பான சொற்களின் பின்